இந்த வலையதளத்தில்உள்ள நல்ல செய்திகள் என்னைச் சார்ந்த பல நண்பர்களுக்குசென்றடைய வேண்டும்என்ற நோக்கத்தில் தான் உருவாக்கப்பட்டது. இதுவரை நான்பதிவிட்டபதிவுகளும்,இனி பதிவிடப்போகும்பதிவுகளும்எனது சொந்தபடைப்புகள்அல்ல. பலபதிவர்கள்எழுதிய நல்லபதிவுகளைத்தான்இங்குதொகுத்துள்ளேன்.

புதன், 28 டிசம்பர், 2011

13 மார்கழி மாசம் கோலத்துல மேல் பூ எதற்கு?

              எனக்கு ஒரு சந்தேகம். மார்கழில மட்டும் ஸ்பெஷல்லா கோலம் போட்டு, அதுமேல பறங்கி பூவோ, பூசணி பூவோ வைகிறோமே, அது எதுக்கு?
             
 "இப்ப இருக்கிற மாதிரி எல்லாம் அந்த காலத்துல, கல்யாணத்துக்கு ஜோடி பார்க்கிற மேட்ரிமோனியல் பகுதி எல்லாம் கிடையாது. அதுனால, எந்தெந்த வீட்டுல கல்யாணத்துக்குப் பெண்ணோ பிள்ளையோ தயாரா இருக்காங்களோ அந்த வீட்டு வாசல்ல கோலத்துல பூ வைப்பாங்க. கலையில வீதி வீதிய பஜன பாடிகிட்டு வர்றவங்க கண்ணுல அந்த பூ தென்படும். தை மாசம் பொறந்த உடனே பேசி, கல்யாணத்த முடிச்சிடுவாங்க! மார்கழி மாசம் மட்டும் பெருசு பெருசா கோலம் போடணும்ங்கறது இல்ல. தினந்தூரும் போடணும். மொக்கு மாவுலலாம் போடக் கூடாது. அரிசி மாவுலதான் போடனும்."

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக