இந்த வலையதளத்தில்உள்ள நல்ல செய்திகள் என்னைச் சார்ந்த பல நண்பர்களுக்குசென்றடைய வேண்டும்என்ற நோக்கத்தில் தான் உருவாக்கப்பட்டது. இதுவரை நான்பதிவிட்டபதிவுகளும்,இனி பதிவிடப்போகும்பதிவுகளும்எனது சொந்தபடைப்புகள்அல்ல. பலபதிவர்கள்எழுதிய நல்லபதிவுகளைத்தான்இங்குதொகுத்துள்ளேன்.

ஞாயிறு, 11 டிசம்பர், 2011

04 குழந்தைகளுக்கு சூரிய ஒளி அவசியம்

கிராமங்களில் குறைந்தது இரண்டடி அகலமாவது விட்டு வீடுகள் கட்டப்பட்டிருக்கும்சந்து என்று அதற்கு பெயர்வீட்டுச்சுவர்களில் ஜன்னல் வைக்கவசதியாகவே இவ்வாறு தனித்தனியாக வீடுகள் கட்டப்பட்டனஇந்த ஜன்னல்கள் வழியே சூரிய ஒளி ஊடுருவி அனைவரையும் தொட்டுச்செல்லும்ஆனால்நகர்புறங்களில் ஒன்றுடன் ஒன்று ஒட்டியும் சரியான காற்றோட்ட வசதியின்றியும்ஒன்றன் மீது ஒன்றாக வீடுகள் அடுக்கு மாடி குடியிருப்புகளாககட்டப்படுகின்றனஎன்னதான் வீட்டு முன்பு காலியிடம் விட்டு பூங்கா அமைக்க வேண்டும் என்று அரசு ஆணை பிறப்பித்தாலும் அபார்ட்மென்ட் குழந்தைகள்யாரும் அதில் விளையாடுவதில்லைஇதனாலேயே அபார்ட்மென்ட்டில் வசிக்கும் குழந்தைகளுக்கு எலும்பு பாதிப்பு உள்ளிட்ட பல நோய்கள் ஏற்படுகின்றன.அபார்ட்மென்ட் சிண்ட்ரோம் என்றழைக்கப்படும் இந்த புதிய குறைபாடு அடுக்கு மாடி குடியிருப்புகளில் வசிக்கும் குழந்தைகள் மத்தியில் அதிகம் காணப்படுகிறது.குழந்தைகளில் எலும்புகளை முற்றிலும் பாதிக்கும் புது பிரச்சினையாக இந்நோய் உருவெடுத்துள்ளது.


இந்நோய் எப்படி ஏற்படுகிறது
இதன் விளைவாகத்தான் சென்னை போன்ற மாநகரங்களில் சிறிய இடங்களில் அடுக்கு மாடி குடியிருப்புகள் கட்டப்படுகின்றனவேலை நிமித்தமாகபெரும்பாலோனோர் பெருநகரங்களில் குடியேற வேண்டிய கட்டாயத்திற்கு ஆளாக்கப்பட்டுள்ளதால் இடப்பற்றாக்குறையினால் பலரும் அபார்ட்மென்ட்களில்வசிக்க வேண்டியுள்ளதுபோதிய காற்றுவெளிச்சம்போன்றவை குறைவுஇதனால் அடுக்குமாடி குடியிருப்புகளில் வளரும் குழந்தைகளை அபார்ட்மென்ட்சிண்ட்ரோம் என்கிற புதிய குறைபாடு தாக்கத் தொடங்கியுள்ளதுஎளிதில் எலும்பு உடைதல்விரிசல் ஏற்படுதல்மற்றும் ரிக்கெட்போன்ற பிரச்சினைகள் இந்தகுறைபாட்டினால் ஏற்படுகின்றன.

சூரியஒளி தேவை
அதிகாலையிலே உடலில் படும் சூரிய ஒளி எலும்புகளுக்கு சத்தளிக்கக் கூடிய விட்டமின் டி யை உற்பத்தி செய்கின்றனஆனால் சூரிய ஒளி பட்டால்கறுத்துவிடுவார்கள் என்ற எண்ணம் மேலோங்கி இருப்பதால் குழந்தைகளை வெயிலில் விளையாட அனுமதிக்க மறுக்கின்றனர்மேலும் .சி போட்டுகதவுகளை அடைத்து விடுவதால் இயற்கை தன்மை இல்லாமல் போய் விடுகின்றதுஇதனால் அடுக்கு மாடி குடியிருப்புகளில் வசிக்கும் குழந்தைகளிடையேஇக்குறைபாடு அதிகம் காணப்படுகின்றனகிராமங்களில் வசிக்கும் குழந்தைகள் வெயில் மழை என்றும் பாராமல் விளையாடுவதானேலே அவர்களுக்குஇதுபோன்ற நோய்கள் தாக்குவதில்லை என்கின்றனர் மருத்துவர்கள்.

வைட்டமின் டி அவசியம்
இந்நோய் தாக்குதலில் இருந்து குழந்தைகளை பாதுகாக்க தினமும் காலை வெயிலில் ஐந்து முதல் பத்து நிமிடங்கள் விளையாட அனுமதிக்க வேண்டும்என்கின்றனர் மருத்துவர்கள்இதனால் உடலுக்குத் தேவையான விட்டமின் டி கிடைப்பதுடன் உடலும் ஆரோக்கியமாக இருக்கும்இதன்மூலமே அபார்ட்மெண்ட்சின்ட்ரோம் போன்ற நோய்களில் இருந்து தப்பிக்க முடியும்என்கின்றனர் மருத்துவர்கள்

Thanks

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக