இந்த வலையதளத்தில்உள்ள நல்ல செய்திகள் என்னைச் சார்ந்த பல நண்பர்களுக்குசென்றடைய வேண்டும்என்ற நோக்கத்தில் தான் உருவாக்கப்பட்டது. இதுவரை நான்பதிவிட்டபதிவுகளும்,இனி பதிவிடப்போகும்பதிவுகளும்எனது சொந்தபடைப்புகள்அல்ல. பலபதிவர்கள்எழுதிய நல்லபதிவுகளைத்தான்இங்குதொகுத்துள்ளேன்.

வியாழன், 26 ஜனவரி, 2012

27 மெதுவா தட்டுங்க தூக்கம் வரும் ......நேர்மறை எண்ணம் தரும்....


குழந்தைகளின் மொழியை எளிதில் புரிந்து கொள்ள இயலாது. அழுகையும், சிரிப்புமே அதன் பரிபாஷைகள். அதனை உணர்ந்து குழந்தைகளை வளர்ப்பது என்பது தனிக்கலை. குழந்தைகளின் செயல்படுகள் புரியாமல் சில நேரங்களில் தாய்மார்கள் எரிச்சல் அடைவதும் உண்டு. குழந்தைவளர்ப்பு குறித்து குழந்தை நல நிபுணர்கள் தரும் ஆலோசனைகளை தெரிந்து கொள்ளலாம்.


செல்லக் கொஞ்சல்
குழந்தைகள் முதலில் விரும்புவது தாயின் அரவணைப்பைதான். அந்த கதகதப்பு கிடைக்காத பட்சத்தில் அதற்காகவே அழுகையை தொடங்குகிறதாம். எனவே குழந்தை அழும் போது அதனை தூக்கி கொஞ்சினால் குழந்தையானது உடனே அழுகையை நிறுத்திவிடுமாம். அந்த நேரத்தில் குழந்தைக்கு உணவூட்டவோ, தாலாட்டவோ, மசாஜ் செய்யவோ, குளிப்பாட்டவோ செய்யலாம்.


தசைகளை வலுப்படுத்தும்
குழந்தையைத் தூக்கும்போது அதன் முதுகுப் புறமாக அதிகமாகப் பிடித்துத் தூக்கக்கூடாது, அது குழந்தையின் தண்டுவடத்தைப் பாதிக்கும் என்று சிலர் `அறிவுரை சொல்வார்கள். ஆனால் உண்மையில்லை. பின்னால் பிடித்துத் தூக்குவது குழந்தையின் `ரிப்ளெக்ஸ் திறனை மேம்படுத்துகிறது. பின்புற மற்றும் கழுத்துத் தசைகளையும், தண்டுவடத்துக்குத் துணையாக உள்ள தசைகளையும் வலுப்படுத்துகிறது


இயல்பாய் பாலூட்டுங்கள்

குழந்தைக்குப் பாலூட்டும்போது அதை மார்பகத்தை நோக்கி அழுத்த வேண்டாம். அப்போது குழந்தை அதன் இயல்பின்படி தனது தலையைப் பின்னோக்கித் தள்ளும்.. எனவே கைகளில் லேசாக ஏந்தி அதற்கு ஏற்ற வகையில் பாலூட்டுவதே சிறப்பானது. குழந்தைகளுக்கு மூச்சுத்திணறல் ஏற்படுவதையும் தடுக்கும். ஒரு சிலர் படுத்துக்கொண்டே பாலூட்டுவார்கள். இது சில சமயங்களில் ஆபாத்தாக முடியும் என்கின்றனர் மருத்துவர்கள்.


வெது வெதுப்பான நீர்
இளந்தாய்மார்கள் பலர் குழந்தையை எப்படி குளிப்பாட்டுவது என்று தெரியாமல் திகைத்துப் போகிறார்கள். அந்நேரத்தில் குழந்தை அழுதால் என்ன செய்வது என்று புரியாமல் தடுமாறிப் போகிறார்கள். பெரியவர்கள் அல்லது கணவரின் துணையோடு குழந்தையை குளிப்பாட்டலாம். எப்பொழுதுமே வெதுவெதுப்பான நீரில் குளிப்பாட்ட வேண்டும். குளித்த பின் மெல்லிய உலர்ந்த துணியை பயன்படுத்தி நன்றாக துடைத்து எடுப்பது நல்லது.


மெல்லிய ஆடைகள்
குழந்தைகளுக்கு காற்றோட்டமான, மெல்லிய துணி ஆடைகளை அணிவிக்கலாம். அது குழந்தை யின் இயல்பான உடல் வெப்பநிலையைப் பராமரிக்க உதவுவதுடன், புற வெப்பநிலையிலிருந்தும் பாதுகாக்கும்

குழந்தையின் இடுப்பு ஆடையை உடனுக்குடன் மாற்றத் தவறுவதால் நோய்த் தொற்று ஏற்படலாம். இன்று நவீன `டயாப்பர்கள் வந்துவிட்டன. குழந்தையின் சருமத்தைச் சுத்தமாகவும், உலர்வாகவும், வாசனையற்றும் வைத்துக்கொள்வது முக்கியம். அது நோய் தொற்றில் இருந்து பாதுகாக்கும்.


நேர்மறை எண்ணங்கள்
குழந்தையை தூங்கவைக்க ஒரு சிலர் பகீரத பிரயத்தனம் செய்வர். வெளியே வேடிக்கை காட்டுவது, காரில் அழைத்துச் செல்வது என பணத்தையும், நேரத்தையும் வீணாக்குவார்கள். அது தேவையற்றது என்கின்றனர் நிபுணர்கள். குழந்தையை அதன் சக்கர நாற்காலியில் வைத்து மெதுவாக உருட்டலாம். அப்போது ஏற்படும் மெல்லிய அதிர்வு, நகர்வுக்குக் குழந்தை பழகி தூங்கத் தொடங்கி விடும்.

குழந்தையின் நெற்றி, நெஞ்சு அல்லது பின்புறத்தில் மெதுவாகத் தட்டுவது ஒரு தூண்டலாகச் செயல்பட்டு குழந்தையைத் தூக்கத்தில் ஆழ்த்துகிறது. அப்போது எழும் ஓசையும் `பாசிட்டிவ்வான பலனைத் தருகிறதாம்.


முத்தமிடுங்கள்
குழந்தைக்கு காய்ச்சல் அடிப்பதை உணர தொட்டுப் பார்க்காமல், குழந்தையின் கழுத்தின் பின்புறம் முத்தமிடுவதன்மூலம் அதன் உடல் வெப்பநிலையைத் துல்லியமாக அறியலாம். உடல் சூடாக இருந்தால் நனைத்துப் பிழிந்த துணியை குழந்தையின் தலையில் போடுவதன் மூலம், மருத்துவச் சிகிச்சை அளிக்கும்வரை அதன் உடல் வெப்பநிலையைக் கட்டுப்படுத்தும். பின்னர் குழந்தை நல மருத்துவரிடம் அழைத்துச் செல்லலாம்.


26 உணவு உண்ணும் போது கடைப்பிடிக்க வேண்டிய நடைமுறைகள் தெரியுமா?


·         அளவிற்கு அதிகமாக உண்டால் நோய்வரும் ஆயுள் குறையும்எனவே வயிறு புடைக்க மூச்சு முட்ட உண்ணக் கூடாது.
·         பசிக்கும் போது தான் சாப்பிட வேண்டும்.

·         மிளகு சேர்ப்பதால் உணவில் உள்ள விஷம் நீங்குகிறது. உடலில் உள்ள விஷமும் முறிகிறது.
·         உணவில் சீரகம் சேர்ப்பதால் உடம்பை சீராக வைப்பது மட்டும் அல்லாமல் குளிர்ச்சியை தருகிறது.
·         வெந்தயம் உஷ்ணத்தைக் குறைக்கிறது. வெந்தயத்தை இரவே தண்ணீரில் ஊற வைத்து காலை எழுந்தவுடன் தண்ணீருடன் பருகி வந்தால் உடம்பில் உள்ள உஷ்ணத்தை குறைக்கிறது.
·         கடுகு, உடலில் உள்ள உஷ்ணத்தை ஒரே அளவாக வைக்கிறது.
·         இஞ்சியை உணவில் சேர்ப்பதால் பித்தம், தலை சுற்றல், வாந்தி போன்ற கோளாறுகள் வருவதில்லை.
·         எள்ளில் தயாரித்த உணவை இரவில் உண்ணக் கூடாது.
·         இரவில் இஞ்சி, கீரை, பாகற்காய், கஞ்சி, தயிர், நெல்லிக்காய் ஆகியவற்றை சேர்க்கக் கூடாது.

·         உணவு உண்பதற்கு முன்பு கை, கால், வாய், போன்றவற்றை நீரால் கழுவ வேண்டும்.
·         காலில் ஈரம் உலர்வதற்கு முன்பே உணவு உண்ணத் தொடங்க வேண்டும்.
·         உணவு உண்ணும் போது பேசக் கூடாது, படிக்கக் கூடாது, இடதுகையை கீழே ஊண்டக் கூடாது. டி.வி பார்க்கக்கூடாது.

·         வீட்டில் கதவை திறந்து வைத்துக் கொண்டு வாசலுக்கு எதிரே அமர்ந்து உண்ணக் கூடாது.
·         காலணி அணிந்து கொண்டு உண்ணக் கூடாது.
·         சூரிய உதயத்திலும், மறையும் பொழுதும் உண்ணக் கூடாது.
·         உணவு உண்ணும் போது உண்பதில் கவனமாக இருக்க வேண்டும்.
·         இருட்டிலோ, நிழல்படும் இடங்களிலோ உண்ணக் கூடாது.
·         சாப்பிடும் பொழுது நடுவில் எழுந்து சென்று மீண்டும் வந்து சாப்பிடக் கூடாது. நின்று கொண்டு சாப்பிக் கூடாது.

·         அதிக கோபத்துடன் உணவு உண்ணக் கூடாது.
·         சாப்பிடும்போது தட்டினைக் கையில் எடுத்துக் கொண்டு உண்ணக் கூடாது.
·         தட்டை மடியில் வைத்துக் கொண்டும், படுத்துக் கொண்டும் உண்ணக் கூடாது.

·         ஒரே நேரத்தில் பல வித பழங்களைச் சாப்பிடக் கூடாது.
·         வெங்கலம், அலுமினியம் மற்றும் செம்பு பாத்திரங்களில் சமையல் செய்யக் கூடாது.
·         வெள்ளித் தட்டில் சாப்பிட்டால் நல்ல அழகு, அறிவு, மன ஒருமைப்பாடு, குடும்ப ஒற்றுமை கிடைக்கும்.

·         இலையைத் துடைத்து வலித்துச் சாப்பிடுவதும், விரலில் ஒட்டிக் உள்ளதை சப்பிச் சாப்பிடுவதும் தரித்திரத்தை வளர்க்கும்.
·         புரச இலையில் சாப்பிட்டால் புத்தி வளரும்.
·         உண்ணும் தட்டில் அல்லது இலையில் முதலில் காய்கறிகளோ, அப்பளமோ உப்போ பரிமாறாமல் சாதத்தை பரிமாறக் கூடாது.
·         அதே போல முதலில் கீரையோ, வத்தலோ இலையில் வைக்கக் கூடாது.
·         அசுப காரியத்தில் மட்டுமே பயன்படுத்துவர்.

·         நாம் சாப்பிட்ட தட்டுக்களை வைத்து சாப்பாட்டையோ அல்லது மற்ற உணவு பதார்த்தங்களையோ மூடி வைக்கக் கூடாது.

·         உண்ணும் உணவில் இறைவன் வாசம் செய்வதால் மேற்கண்ட நடைமுறைகளை கடைப்பிடிப்பது சிறப்பைத்தரும்.

Thanks
Dinamalar