இந்த வலையதளத்தில்உள்ள நல்ல செய்திகள் என்னைச் சார்ந்த பல நண்பர்களுக்குசென்றடைய வேண்டும்என்ற நோக்கத்தில் தான் உருவாக்கப்பட்டது. இதுவரை நான்பதிவிட்டபதிவுகளும்,இனி பதிவிடப்போகும்பதிவுகளும்எனது சொந்தபடைப்புகள்அல்ல. பலபதிவர்கள்எழுதிய நல்லபதிவுகளைத்தான்இங்குதொகுத்துள்ளேன்.

ஞாயிறு, 1 ஜனவரி, 2012

20 துணிய எப்படி புளியனும்?


துணிங்களத் தோச்சிட்டுப் பிழியும்போது, சிலர் பேர் கால்ல பிழிஞ்சிக்குவாங்க. அப்படி செஞ்சா, துணியில இருக்கிற அழுக்குங்க தண்ணியோட சேர்ந்து கால்ல போய், அங்க ஏற்கனவே இருக்கிற அழுக்குங்க கூடக் கூட்டணியா சேர்ந்துக்கும்.

                அப்புறம் என்ன? அழுக்கோட அழுக்கு சேர்ந்து, தன்னியுந்தான் இப்ப ஒத்தாசைக்கு இருக்கே, எல்லாக் கிருமிகளும் உடம்புல பரவி வியாதியக் கொண்டாந்துடும். முக்காவாசி வியாதிங்க வர்றதுக்கு காரணமே, நம்ம காலுன்கலத் தூய்மையா வச்சிக்கததாலதான். அதுனாலதுணிங்களத் தோச்சிட்டுப் பிழியும்போது, கால்ல வச்சிப் பிழியக் கூடாதுன்னு பெரியவங்க சொன்னாங்க. அதோட, ராத்திரி, படுக்கும்போது காலை நல்லக் கழுவிட்டு, ஈரம் போகத் தொடசிட்டுப் படுக்கனும்னாங்க. அதனாலதான் இவ்வளவு மருத்துவ வசதிங்க இல்லாத அந்தக் காலத்திலையும், ஆரோக்கியத்தோட இருந்தாங்க.

             அடுத்தது: துணியத் தாண்டக் கூடாதுன்னு சொல்லி வச்சிருக்காங்க. காரணம்? இறந்து போனவங்களுக்கு உண்டான காரியங்களைச் செய்யும்போதுதான். துணியப் போட்டு மிதிக்கச் சொல்வாங்க (தாண்டச் சொலுவாங்க). அதனாலதான், துணியத் தாங்கக் கூடாதுன்னு சொன்னாங்க.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக