இந்த வலையதளத்தில்உள்ள நல்ல செய்திகள் என்னைச் சார்ந்த பல நண்பர்களுக்குசென்றடைய வேண்டும்என்ற நோக்கத்தில் தான் உருவாக்கப்பட்டது. இதுவரை நான்பதிவிட்டபதிவுகளும்,இனி பதிவிடப்போகும்பதிவுகளும்எனது சொந்தபடைப்புகள்அல்ல. பலபதிவர்கள்எழுதிய நல்லபதிவுகளைத்தான்இங்குதொகுத்துள்ளேன்.

வெள்ளி, 21 நவம்பர், 2014

121 நிம்மதியாக வாழ வேண்டுமா?

உலகில் உள்ள அனைவருக்கும் நிமதியாக வாழவேண்டும் என்று ஆசை. ஆனால் நிம்மதி என்றால் என்ன? நிம்மதியாக வாழ்வது எப்படி பலருக்கும் புரியாத ஒரு புதிராகவே இருக்கிறது. நமக்கு என்ன பிடிக்கும்? என்ன பிடிக்காது? என்று தெரியாத நம்மால் மற்றவர்களுக்கு என்ன பிடிக்கும், என்ன பிடிக்காது என்பதை தெரிந்துக்கொள்வது சிரமமான விஷயம் தான். நாம் நிம்மதியாக வாழ வழித் தெரியாமல் பிறரை நிம்மதியாக வாழவைக்க முடியும் என்பதும் கடினமான விஷயம். எனவே முதலில் நாம் நிமதியாக வாழ்கிறோமா? அமைதியாக வாழ்கிறோமா? ஆனந்தமாக வாழ்கிறோமா? என்பதை தெரிந்துக் கொண்டு அதற்கான வழிமுறைகளைக் கண்டறிந்து வாழ வேண்டும். நாம் நிம்மதியாக வாழ்ந்தால் மற்றவர்களையும் நிமாதியாக வாழ வைப்பது சுலபம்.

ஒவ்வொரு மனிதனுக்கும் மூன்று விஷயங்கள் உள்ளன? 1. உடல் 2.மனம், 3. புத்தி. உடல் என்பது அனைவருக்கும் தெரிந்த விஷயம். ஆனால் மனம் மற்றும் புத்திக்கும் உள்ள வித்தியாசம் பலருக்கும் தெரிவதில்லை. மனதுக்கும் புத்திக்கும் உள்ள வித்தியாசம், அது செயல்படும் முறை ஆகியவற்றை நாம் தெரிந்து கொள்வதன் மூலமாக மட்டுமே நிம்மதியாக வாழ முடியும்.

முதலில் மனம் என்றால் என்பது என்ன என்பதை பற்றி தெரிந்துக்கொள்வோம். மனதின் வேலை பிடித்தது, பிடிக்காதது என்று ஆராய்ந்து யோசிக்கும் நிலைக்கு பெயர் மனது.


மனதின் தன்மை எனக்கு இது பிடிக்காது, எனக்கு இது பிடிக்கவில்லை, எனக்கு இது கொஞ்சம் பிடிக்கிறது, இது அதிகமாக பிடிக்கிறது. அது எனக்கு பிக்கவில்லை. அது எனக்கு ரொம்பவே பிடிக்கவில்லை என்று ஒரு அளவை நிர்ணயித்து முடிவெடுக்கும் ஒரு சக்திக்கு பெயர் மனது.

புத்தி என்றால் என்ன?
புத்தி என்பது நல்லது, கெட்டது என்று ஆராய்ச்சி செய்யும் நிலைக்கு புத்தி என்று பெயர். இது நல்லது, இது கெட்டது, இது ரொம்ப நல்லது, இது ரொம்ப ரொம்ப கெட்டது என்று இருநிலைகளில் ஆராய்ச்சி செய்து முடிவெடுக்கும் தன்மைக்கு பெயர் புத்தி. மனதின் வேலை வேறு, புத்தியின் வேலை வேறு. இதை புரிந்துக் கொள்வதன் மூலமாக நாம் 

நிம்மதியாக வாழ முடியும்.

உதாரணமாக நாம் ஒரு காரை வாங்கவேண்டும் என்று கார் விற்பனை செயும் கடைக்கு செல்கிறோம். அங்கே 15 வித மாடல்களில் கார்கள் நிறுத்திவைக்கப் பட்டிருக்கிறது. அந்த 15 கார்களையும் ஒரு 5 நிமிடம் நம் கண்கள் பார்கும்போது நம் மனது நமைக் கேட்காமலே அதன் வேலையை ஆரம்பித்து விடுகிறது. ஒவ்வொரு காரையும் பார்த்து இது எனக்கு பிடித்திருக்கிறது, 100 மதிப்பெண், இது எனக்கு பிடிக்கவில்லை மைனஸ் ௧௦௦ மதிப்பெண், இது எனக்கு பிடித்திருக்கிறது 500 மதிப்பெண்கள், இது எனக்கு மிக மிகப் பிடித்திருக்கிறது ஒரு லட்சம் மதிப்பெண்கள் என்று 15 கைகளுக்கும் மதிப்பீடு செய்து 15 கார்களுக்கும் அவற்றின் பெயருடன் பட்டியலிட்டு அதற்கு பதிப்பெங்கள் இட்டு எந்தக்கார் இந்த கார் சுமார் என்று 5 அல்லது 10 நிமடங்களில் அந்தகக் கார்களை மதிப்பீடு செய்து ஒரு அட்டவணை தயார் செய்கிறது. நீங்கள் ஒரு வேலை இந்தக் 15 கார்களையும் பார்த்து முடித்தபின் உங்களிடம் வந்து நான் கேட்கிறேன். எந்த கார் உங்களுக்கு பிடித்துருக்கிறது என்று. இந்த கார் எனக்கு பிடித்திருக்கிறது என்று உடனடியாக தெளிவாக ஒரு காரை சுட்டிக் காட்டுவீர்கள். எந்த காரை பிடிக்கவில்லை என்றாலும் அதேபோல் ஒரு காரை காட்டுவீர்கள். இந்த வேலை எப்பொழுது நடந்தது?

நாம் கேட்டாலும் கேட்காவிட்டாலும், நினைத்தாலும், நினைக்காவிட்டாலும், நமது மனது இந்த பட்டியலை தயார் செய்துக்கொண்டே இருக்கும். இதுதான் மனிதனின் குணம். ஆனால் புத்தி என்பது அவ்வளவு சீக்கிரமாக இப்படி பணிகளைச் செய்வதில்லை. ஏனென்றால் அதற்கு ஆராய்ச்சி தேவைப்படுகிறது. புத்தி உடனடியாக முடியு எடுப்பதில்லை. நம் மனதிற்கு பிடித்த காரை வாங்க முடியாது. ஏனென்றால் புத்தி என்று ஒன்று உள்ளது. அது “கொஞ்சம் பொறுப்பா நல்ல கார், கேட்ட கார் என்று ஆராய்ச்சி செய்து கண்டுப்பிடிக்கணும்”. அதுக்கு அப்புறம் தான் அந்தக் காரை வாங்க வேண்டும்” என்று அது சொல்கிறது. புத்தி ஆராய்ச்சி சயா ஆரம்பிக்கிறது. அந்தக் கார் கடையிலுள்ள மேலாளரைக் கூப்பிட்டு அந்தக் காரில் என்ன செளகரியம் இருக்கிறது, ஒவ்வொரு காரின் விலை என்ன? நம்மிடம் பணம் எவ்வளவு உள்ளது. லோன் கிடைக்குமா? கிடைக்காத?ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு எவ்வளவு மைலேஜ் கிடைக்கும். இது பெற்றோலா? டீசலா? எத்தனை பேர் அமர்ந்து பயணம் செய்ய முடியும்? என்று பல விஷயங்களை ஆராய்ந்து, வீட்டில் கார் நிறுத்தும் இடம் உள்ளதா? நம் வீட்டில் நிறுத்த முடியுமா? நம் கும்பத்திற்கு இது ஒத்துவருமா? நம் அலுவலகத்திற்கு இது ஒத்து வருமா? என்று ஆரைவ்ஹி செய்து 1 முதல் 15 வரை கார்களை அட்டவணைப்படுத்தி அந்த காரின் பெயரை எழுதி அதற்கு மதிப்பெண் இடுகிறது. இப்படி மனது முதலில் வேலையை முடிக்கிறது. பறகு சில தகவல்களைத் தெரிந்துக்கொண்டு பின் புத்தி தன வேலையை முடிக்கிறது. இபூளுதுதான் நாம் முடிவெடுக்க ஆரம்பிக்கிறோம். அப்பொழுது கார் நிறுவன அதிகாரி நம்மிடம் வந்து சேர்கிறார்.”சார் எந்தக் காரை தேர்வு செய்திகுரிகீர்கள்?” என்று கேட்பார், நாம் சொல்வோம். “ஒரே குழப்பமாக இருக்கிறது, சற்று பொறுங்கள் முடிவு எடுத்துவிட்டு பிறகு சொல்கிறேன்” என்று.

நன்றாக யோசித்து பாருங்கள். எப்பொழுதுமே 15 விஷயத்தில் நாம் குழம்பியதே கிடையாது. குழப்பம் என்பது எப்பொழுதுமே இரு விஷயத்தில் மட்டுமே வரும். நீங்கள் ஏன் குழம்பிக்கொண்டு இருக்கிறீர்கள். என்றால் மனதுக்குப் பிடித்த முதல் மதிப்பெண் எடுத்த காரை வாங்குவதா? அல்லது புத்தி கணக்கிட்டு முதல் மதிப்பெண் அளித்த காரை வாங்குவதா?என்று.ஏனெனில் இரண்டு வேறு வேறு காராக இருக்கிறது.ஆனால் மற்ற 13 கார்களைப் நமக்கு கவலையே இல்லை. ஏனென்றால் எப்பொழுது மனிதன் மனதில் குழப்பம் என்றால் புத்திக்கும் மனதுக்கும் உள்ள சண்டை அல்லது முரண்பாடு. அதாவது பிடித்த விஷயத்தைச் செய்வத? நல்ல விஷயத்தை செய்வதா? என்பது தான் அனைத்து மனிதர்களுக்கும் ஏற்படும் குழப்பத்திற்கு அடிப்படை காரணம்.

ஒருவேளை மனதிற்குப் பிடித்த காரும், புத்திக்கு நல்லது என்று தீர்மானிக்கப்பட்ட காரும் ஒன்றே என்றால் என்ன செய்வீர்கள்? மனதில் குழப்பமே இருக்காது. அந்தக் காரை உடனடியாக வாங்கிவிட்டு நம் வீட்டிற்க்கு சென்றுவிடுவோம். அந்தக் கார் நம் வாழ்வில் நிமதியை, அமைதியை, சந்தோஷத்தை மட்டுமே கொடுக்கும். நன்றாக யோசித்து பார்த்தல், ஒரு மனிதனை வாழ்வில் நிம்மதி சந்தோசம் ஏற்படுகிறது என்றால் மனதிற்கு முதல் மதிப்பெண் எடுத்த, புத்திக்கு முதல் மதிப்பெண் எடுத்த(பிடித்த) விஷயமாக மட்டுமே இருக்கும்.

இப்படி மனதிற்கும், புத்திக்கும் குழப்பம் உள்ள நேரத்தில் நாம் ஏதாவது ஒருபக்கம் சாய வேண்டயுள்ளது. ஒருவேளை மனதிற்குப் படித்த காரை வாங்கிக் கொண்டு வீட்டிற்க்கு செல்வீர்கள் என்றால் உங்கள் மனைவி உங்களுடன் சண்டையிடுவார், இந்தக் காரை என் வாங்கினீர்கள்? என்று கேட்பார். நீங்கள் சொல்வீர்கள், “என் மனதிற்கு பிடித்துருந்தது வாங்கிவிட்டேன்” என்பீர்கள். “ இந்தக் காரை விடவும் நல்ல கார்கள் எவ்வளவோ உள்ளன. அதைவிட்டுவிட்டு இந்தக் காரை வாங்கி வந்திருக்கிறீர்கள். உங்களுக்கு கொஞ்சம் கூட பொறுப்பே இல்லை. என்று மனைவியிடம் திட்டு வாங்க வேண்டியதிருக்கும்.

அலுவலகத்திலும் உங்கள் நம்பர்கள் இந்தக் காரை என் வாங்கினாய் என்று கேட்பசர்கள். ஏனென்றால் உங்கள் மனதுக்கு அந்தக் கார் பிடித்துருக்கிறது. ஆனால் உலகத்திற்கு அது பிடிக்காது. இப்பொழுது உங்கள் வாழ்கையில் குழப்பம் வருகிறது. ஒருவேளை புத்திக்குப் பிடித்த ஒரு காரை வாங்கி சென்றால் உங்கள் மனைவி சந்தோஷப்படுவார். உங்கள் நண்பர்கள் உங்களைப் பாராட்டுவார்கள். ஆனால் உங்கள் மனது கவலையுடன் இருக்கும். தனக்குப் பிடித்த காரை வாங்கவில்லையே என்று, ஒருவேளை உங்கள் மனதிற்கு காரை ரூட்டில் எங்காவது பார்த்தல், ஒரு நாள் நம் அந்த காரை வாங்க வேண்டும் என்று மணம் எங்கும்.

நன்றாக யோசித்துப் பாருங்கள் ! ஒரு மனிதன் நிம்மதியாக வாழவேண்டும் என்றால் மனதிற்கு பிடித்த, புத்தி நல்லது என்று சொன்ன விஷயத்தை மட்டுமே காலை முதல் மாலை வரை செய்து வரவேண்டும். எப்போது மனதிற்குப் பிடிக்காத விஷயத்தையோ நாம் வாழ்வின் நிம்மதியைக் கெடுக்கிறது. இதுதான் முக்கியமான பாடம். இதை எப்படி நாம் ஒழுங்குபடுத்துவது. நாம் எப்படி நிம்மதியாக வாழ்வது என்பதை இப்பொழுது தெளிவாகப் பார்க்க இருக்கிறோம்.

நான் மனதை, புத்தியை புரிந்தது கொள்வதற்கு கார் என்ற உதாரணத்தை வைத்து கூறினேன். ஆனால் இவை மற்ற விஷயங்களில் கணவன்- மனைவி, குழந்தைகள், அலுவலகம், நாம் உண்ணும் உணவு இதுபோன்ற விஷயங்களில் கணவன்- மனைவி, குழந்தைகள், அலுவலகம், நாம் உண்ணும் உணவு இதுபோன்ற விஷயங்களில் எல்லாம் யோசித்துப் பாருங்கள். எல்லா இடங்களிலும் இதே மனம், புத்தி- சூத்திரம் தான் நமக்குத் தேவைப்படுகிறது. எனவே நாம் நிம்மதியாக வாழவேண்டும் என்றால் மனதிற்கும் பிடித்திருக்க வேண்டும். ஆனால் அப்படி வாழ்வது சாத்தியமா? முடியுமா? அது சாதாரணமான விஷயமா? கடினமான விஷயமா? எப்படி வாழ்வது? என்பதை நாம் தெளிவாக பார்க்க இருக்கிறோம்.

நாம் நம் மனதுக்குப் பிடித்த மாதிரி வாழ முயலும்பொழுது நம்முடன் இருப்பவர்களைக் கஷ்டப்படுத்துகிறோம். நாம் புத்திசாலியாக நல்ல விஷயங்களை செயல்படுத்தும்பொழுது நம்மை நாமே கஷ்டப்படுத்திக் கொள்கிறோம். யார் ஒருவர் தன் மனதிற்குப் பிடித்த மாதிரி வாழ்ந்து கொண்டிருக்கிறாரோ அவர் எல்லா விஷயத்திலும் தன் மனதிருக்கு எது பிடித்திருக்கிறதோ அதை மட்டும் செய்து கொண்டு, தன்னுடைய புத்தியைப் பயன்படுத்தாமல் வாழ்கிறார் என்று அர்த்தம். அவர் நிம்மதியாக வாழ்வார். ஆனால் அவருடன் வாழும் குடும்பத்தினர், நண்பர்கள், அலுவலகத்தினர் என யாரும் நிம்மதியாக மனதிற்குப் பிடித்த மாதிரி வாழவேண்டும் என்றல் கூட இருப்பவர்கள் கஷ்டப்பட்டுத் தான் ஆகவேண்டும். அதே சமயம் ஒரு மனிதன் நல்ல விஷயங்களை மட்டும் முடிவெடுத்து தன் மனதிற்கு பிடிக்காமல் வாழ்ந்து கொண்டிருக்கும் பொழுது அருகில் உள்ள நண்பர்கள், குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் அனைவரும் நிம்மதியாக வாழ்வார்கள். ஆனால் அவர் நிம்மதியாக வாழமாட்டார். எனவே அவருக்கு நோய்கள் வருகிறது. அவர் குழப்பமடைகிறார். அவர் வருத்தமடைகிறார். அவர் தன்னை மெழுகுவர்த்தி போல் எண்ணிக் கொள்கிறார்.

பல வீடுகளில் பெற்றோர்கள் தன் குழந்தைகளுக்காக தான் மனதுக்கு பிடிக்காமல் 
வாழ்ந்து புத்திசாலித்தனமாக குழந்தை வளர்ப்பதற்காகத் தன் வாழ்க்கையை வாழாமல் இறந்து கொண்டிருக்கிறார்கள். நடைபிணமாக வாழ்கிறார்கள். இந்த வார்த்தையை அதாவது இறந்து கொண்டு இருக்கிறார்கள். நடைபிணமாக வாழ்கிறார்கள். இந்த வார்த்தையை அதாவது இறந்து கொண்டு இருக்கிறார்கள் என்ற வார்த்தையை நான் ஏன் பயன்படுத்திருக்கிறேன் என்றால் அதன் முக்கியத்துவத்தைப் புரிந்து கொள்வதற்காக, ஏனென்றால் மனதுக்குப் பிடிக்காமல் வாழும் ஒவ்வொரு நிமிடமும் நாம் இறக்கிறோம். மனதுக்குப் பிடித்த மாதிரி வாழும் ஒவ்வொரு கணமும் நாம் வாழ்கிறோம். அதே போல பல குழந்தைகள் பெற்றோருக்காக மனதிற்குப் பிடித்த விஷயத்தை விட்டுவிட்டு புத்திசாலித்தனமாக வாழும் பொழுது பெற்றோர்கள் நிம்மதியாக வாழ்கிறார்கள். ஆனால் அக்குழந்தை இறந்து கொண்டிருக்கிறது. இது பெற்றோர்க்கும் குழந்தைக்கும் இடையே மட்டும் இவ்வாறு நடப்பதில்லை. பல மனைவிமார்கள் தங்கள் கணவனின் அன்புக்காக தங்கள் மனதுக்குப் பிடிக்காமல் வாழ்ந்து இறந்து கொண்டிருக்கிறார்கள். பல கணவன்மார்கள் தன் மனைவிக்குக் பிடித்த விஷயத்தை செய்ய வேண்டும் என்று தனக்குப் பிடிக்காவிட்டாலும் விட்டுக் கொடுத்து வாழ்வில் இறந்து கொண்டிருக்கிறார்கள். தயவு செய்து புரிந்துகொள்ளுங்கள். இது கணவன் மனைவிக்கு மட்டுமல்ல, அலுவலகம், தொழிலாளி- முதலாளி, நண்பர்கள் மற்றும் அனைத்து இடங்களிலும் இந்த விதியைப் பயன்படுத்திப் பார்க்கலாம். எப்பொழுது நம் மனதிற்குப் பிடித்த விஷயத்தை மட்டும் நாம் செய்துகொண்டு இருக்கிறோமோ, அப்பொழுது நம்மைச் சுற்றியுள்ள அனைவரும் பாதிக்கப்படுகிறார்கள். எப்பொழுது புத்திசாலித்தனமாக நல்ல விஷயங்களை மட்டுமே செய்துகொண்டு இருக்கிறோமோ, நாம் பாதிக்கப்படுகிறோம். நிம்மதியற்ற வாழ்வு வாழ்வோம். இதுதான் கவனிக்க வேண்டிய விஷயம்.

இதை நாம் புரிந்துகொண்டு நாமும் நிம்மதியாக வாழவேண்டும், நம்முடன் இருப்பவர்களும் நிம்மதியாக வாழவேண்டும் என்பதைப் புரிந்துகொண்டு நம் வாழ்வின் சில விஷயங்களை மாற்றி அமைக்கும்பொழுது மட்டுமே நாமும் நிம்மதியாக வாழ முடியும். நம்முடன் வாழும் குடும்பத்தினர், உற்றார், உறவினர், நண்பர்கள் என அனைவரும் நிம்மதியாக வாழமுடியும். இது புரியாதவரையில் நம்மை நாமே ஏமாற்றிக் கொண்டு மற்றவர்களையும் கஷ்டப்படுத்தி வாழ்ந்து கொண்டு தான் இருப்போம்.
சந்தோஷ் சுப்பிரமணியம் என்று ஒரு தமிழ் திரைப்படம் உள்ளது. தயவு செய்து நிம்மதியாக வாழவேண்டும் என்றல் இந்தப் படத்தை அமைதியாக, ஒருமுறை உங்களுக்கு எடுத்து கொள்ளும் சிகிச்சையாக நினைத்து, இப்படத்தை முழுவதுமாக பாருங்கள். இந்தப் படத்தில் அப்பாவாக நடிக்கும் கதாபாத்திரம் நல்ல விஷயம். கேட்ட விஷயம் என்பதை மட்டும் பார்த்துக்கொண்டு தன் மகனை வழிநடத்தும். அதனால் தன்னுடைய மகன் எவ்வளவு கஷ்டப்படுகிறான் என்பதை அந்தப் படத்தில் தந்தை, மகன் கதாபாத்திரங்கள் வழியாக நன்றாக புரிய வைக்கப்பட்டிருக்கும்.

உடனே திரைப்படத்தில் வரும் மகன் கதாபாத்திரத்தை ஆதரித்தும் தந்தை கதாபாத்திரத்தை எதிர்த்தும் என்னுடைய கருத்துகளைச் சொல்வதாக யாரும் எண்ணிவிட வேண்டாம். இப்படத்தை பார்த்து முடித்தவுடன் இதில் உள்ள தந்தைக்கும் மகனுக்கும் இடையே நிலவும் பிரச்சனையைபோல நண்பர்கள், கணவன், மனைவி என்று மாற்றி மாற்றி யோசித்துப் பார்க்க வேண்டும். அப்பொழுது எல்லாம் புரிந்துவிடும். இந்தப் படத்தில் தந்தை கதாபத்திரம் தன் மகனுக்கு எந்த மாதிரி ஆடை அணிந்தால் நன்றாக இருக்கும். என்ன படித்தல் நன்றாக இருக்கும். எப்படி நடந்தால், எப்படி உட்கார்ந்தால் நன்றாக இருக்கும் என்றும், எப்படி பேசவேண்டும், எப்படி தலைமுடியை வைத்துக்கொள்ளவேண்டும் என்று தனக்கு பிடித்தமாதிரி மட்டுமே யோசித்து அந்த மகனுக்கு பிடிக்கிறதா? இல்லையா? என்று ஆராய்ச்சி செய்யாமல் தன் விருப்பப்படியே மகனை வளர்ப்பார். ஆனால் மகன், தன அப்பாவுக்கு எதிராகப் பேச தெரியாமல் அப்பாவை பாவம் என்று நினைத்து புத்திசாலித்தனமாக எல்லாவற்றையும் ஏற்றுக்கொண்டு தன் மனதிற்கு விருப்பமில்லாமல் சிறுவயதிலிருந்தே வாழ்ந்து வருவான். எனக்கு அந்தப் படத்தைப் குறித்து எதுவும் அதிகம் கூறுவதற்கு விருப்பமில்லை. ஏனென்றால் இந்தக் கட்டுரையைப் படித்துக்கொண்டு இருக்கும்பொழுதே இதை நிறுத்திவிட்டு அப்படத்தைப் பார்த்துவிட்டு பின் தொடரலாம். கண்டிப்பாக உலகில் உள்ள அனைத்து மக்களும் ஒருமுறையாவது இப்படத்தைப் பார்க்கவேண்டும். இப்படத்தைப் பார்த்து புரிந்துகொண்டால் மட்டுமே நமது வாழ்க்கையை நிம்மதியாக வாழமுடியும். ஏனென்றால் அந்தப் படத்தில் வரும் மகன் கதாபாத்திரத்தை நானாகவும், தந்தை கதாபாத்திரத்தை என் அப்பாவாகவும் நான் நினைத்தால் அது உண்மையாக இருக்கிறது.

சிறுவயது முதலே நான் ஒரு புத்திசாலிக் குழந்தை, என் அப்பா அவருக்குப் பிடித்தமாதிரி, அவர் மனதுக்குப் பிடித்தமாதிரி நான் இருக்க வேண்டும் என்று ஆசைப்படுவார். உதாரணமாக நான் வீட்டிற்கு வந்தவுடன் ஒரு அரைமணிநேரம் ஓய்வு எடுக்கவேண்டும் என்று விரும்புவேன். ஆனால் அவர் வீட்டுக்கு வந்தவுடன், என்னை உடனே கை, கால், முகம் கழுவு என்று கூறுவார். நான் பிறகு கழுவிக் கொள்கிறேன் என்று கூறுவேன். அதற்கு எனக்கு அறிவுரை கூறுவார். அரை மணிநேரம் தொடர்ந்து பேசுவர். அவர் பேசுவதைக் கேட்பதற்கு பதிலாக அவர் சொல்வதை செய்து விடலாம் என்று கை, கால், முகம் கழுவச் சென்று விடுகிறேன். ஆனால் என் மனதுக்கு விருப்பமின்றி கஷ்டப்பட்டு கழுவிக்கொண்டு இருப்பேன். இறந்துகொண்டிருந்தேன். என் அப்பாவின் விருப்பத்திற்கு நாம் வாழும் பொழுது எனக்கு நிம்மதி இல்லாத வாழ்வாக இருந்தது. அதைப்போல எனக்கு பசி எடுத்தபின் சாப்பிட வேண்டும் என்று தோன்றும். ஆனால் அவருக்காகச் சாப்பிடுவேன். அப்பொழுது அந்தச் சாப்பாடு சுவையாக இராது. அதைவிட கொடுமையான விஷயம் என்னவென்றால், நான் ரசம் பிடிக்கவில்லை என்று சாப்பிடாமல் இருந்தால் ரசம் உனக்காகத்தான் வைத்தது. சுவையாக இருக்கும். நீ கண்டிப்பாக ரசம் சேர்த்துச் சாப்பிடவேண்டும் என்று வற்புறுத்துவார். அவருக்கு ரசம் பிடித்திருக்கிறது. ஆனால் எனக்குப் பிடிக்கவில்லை என்பதை அவருக்கு புரியவைக்கும் பக்குவம் அந்த வயதில் என்னிடம் இல்லை.

நான் இரவு 8 மணிக்கு எல்லாம் படுத்து உறங்கி விடுவேன். என் தந்தை அலுவலகத்தில் இருந்து வீடுதிரும்பும்பொழுது இரவு மணி பதினொன்று ஆகிவிடும். வரும்பொழுது தன் ஆசை மகனுக்காக வடை, போண்டா வாங்கி வருவார். நிம்மதியாகத் தூங்கிக் கொண்டிருக்கும் என்னை பதினொரு மணிக்கு எழுப்புவார். எனக்கு எழுந்திருக்கப் பிடிக்காது. அனால் என்னை வலுக்கட்டாயமாக எழுப்பி, உனக்காகத் தான். வடை, போண்டா வாங்கி வந்திருக்கிறேன் என்று என்னை எழுப்புவார். வேண்டாம் என்று சொன்னால் இதுதான் நல்லது சாப்பிடு என்று அடம்பிடிப்பார். என் அப்பாவிற்காக அந்த வடை, போண்டாவை நான் கஷ்டப்பட்டு சாப்பிடுவேன். எனக்கு வடை, போண்டா பிடிக்கும், ஆனால் பகல் பொழுதில் ஆசைப்படும் பொழுதோ, அல்லது பசிக்கும்பொழுது தான் பிடிக்குமே ஒழிய தூங்கிக் கொண்டிருக்கும் பொழுது சாப்பிட பிடிக்காது.இதை என் அப்பா புரிந்துகொள்ளவில்லை. அதிலும் அவர் 5 வடை வாங்கி வந்தால் 5 வடையும் சாப்பிடவேண்டும் என்று அடம்பிடிப்பார். என் அப்பாவிற்காக என் மனதிற்குப் பிடிக்காமல் அந்த வடைகளைச் சாப்பிடும்பொழுது நான் கஷ்டப்பட்டேன் என்பது அவருக்குத் தெரியாது. உடனே என் அம்மாவோ டீ வைதுக்கொண்டுவரச் சென்றுவிடுவார். ஏனென்றால் வடையும், போண்டாவும் சாப்பிடும்பொழுது டீ சாப்பிட்டால் நல்லது என்று என் தாயார் நினைத்துக்கொண்டிருந்தார். வடை, போண்டா சாப்பிடும்பொழுது டீ சாப்பிடுவது அவருக்குப் பிடிக்கும். அது எனக்குப் பிடிக்காது. என் தாயாரோ நான் வேண்டாம் என்றாலும் விடமாட்டார். “வடை சாப்பிட்டால், டீ சாப்பிட்டால்தான் ஜீரணமாகும். உனக்குத் தெரியாது என்று டீ சாப்பிடச்சொல்லி எனக்குத் தருவார். நான் மனதுக்குப் பிடிக்காத அந்த டீயை சாப்பிட்டு முடித்தவுடன் என் அப்பாவும் அம்மாவும் நிம்மதியாக “ அப்பாடா என் மகனுக்கு பிடித்த மாதிரி பணிவிடை செய்து அவனுக்குப் பிடித்த மாதிரி சாப்பிடச் செய்துவிட்டோம், இனி தூங்கச் செல்லலாம்” என்று அவர்கள் தூங்கச் சென்றுவிடுவார்கள். நான் இரவு முழுவதும் பேய்போல விழித்துக் கொண்டு உட்கார்ந்திருப்பேன். என்னால் தூங்க முடியாது. தூக்கம் வராது. இதை போல் நிறைய உதாரணங்கள் சொல்லலாம். இப்பொழுது நீங்கள் புரிந்து கொண்டிருப்பீர்கள் என்று நினைக்கிறேன்.

எனது வாழ்க்கையை மற்றவர்கள் வாழும் பொழுது என் மனது கஷ்டப்படுகிறது. அதைபோல் மற்றவர்களின் வாழ்க்கையை நான் வாழும் பொழுது அவர்கள் கஷ்டப்படுகிறார்கள். இதுதான் உண்மை. என் விஷயத்தில் என் அப்பா என்னை கஷ்டப்படுதினார். ஆனால் சில வீடுகளில் சில அப்பாக்கள் தங்கள் குழந்தைகளுக்காக விட்டுக்கொடுத்து குழந்தைகளின் சந்தோஷத்திற்காக தன் புத்திசாலித்தனத்தைப் பயன்படுத்தி அவர்கள் கஷ்டப்பட்டு கொண்டிருக்கிறார்கள்.

தயவுசெய்து புரிந்து கொள்ளுங்கள், நான் அப்பாக்கள், குழந்தைகள் கஷ்டப்படுகிறார்கள் என்று மட்டும் கூற வரவில்லை. சில வீடுகளில், சில இடங்களில் மாற்றங்கள் இருக்கலாம். மனைவியால் கணவன் கஷ்டப்படலாம், கணவனால் மனைவி கஷ்டப்படலாம். நண்பர்களால், சிலரால் சிலருக்கு கஷ்டம் ஏற்படுகிறது. முதலாளியல் தொழிலாளிகளுக்கும், தொளிலலியல் முதலாளிக்கும் கஷ்டங்கள் ஏற்படுகிறது. இதற்கு அடிப்படை காரணம் என்னவென்றால் ஒன்றைப் புரிந்துகொண்டால் நம்மால் உணரமுடியும்.

பல முதலாளிகள் தனக்குப் பிடித்தமாதிரி நிறுவனம் ( கம்பெனி) இருக்க வேண்டும் என்பதற்காக தொழிலாளிகளைக் கஷ்டப்படுத்திக் கொண்டு இருக்கிறார்கள். தொழிலாளிக்கு என்ன பிடிக்கும் என்பதை அவர்கள் யோசிப்பதில்லை. பல முதலாளிகள் புத்திசாலித்தனமாக தொழிலாளிக்குப் பிடித்த மாதிரி நடந்துகொண்டு தன்னை வருத்திக்கொண்டு இருக்கிறார்கள். எனவே ஒரு விஷயத்தை புரிந்துகொள்ள வேண்டும். ஒரு மனிதன் நிம்மதியாக வாழவேண்டும் என்றால் தன் மனதிற்குப் பிடித்தமாதிரி வாழவேண்டும். ஆனால் மனதிற்குப் பிடித்தமாதிரி வாழவேண்டும் என்று கூறும்பொழுது மனது கண்டபடி எல்லாவற்றையும் ஆசைப்படும். ஆசைப்படும் எல்லாவற்றையும் நிறைவேற்றிட முடியாது. எனவே ஒரு மனிதன் மனதுக்குப் பிடித்தவாறு வாழவேண்டும். அதே சமயத்தில் மற்றவர்களுக்கும் கஷ்டத்தைக் கொடுக்கக் கூடாது. நாம் மனதுக்குப் பிடித்தவாறு வாழ்வதற்காக மற்றவர்களின் உடலை, உயிரை, மனதை நாம் கஷ்டப்படுத்தக்கூடாது என்பதை மட்டும் நாம் நினைவில் வைத்துக் கொண்டு வாழ்ந்தால் நாமும் நிம்மதியாக வாழலாம். மற்றவர்களையும் நிம்மதியாக வாழவைக்கலாம். 

சமீபகாலத்தில் எனக்குத் தெரிந்த நண்பனின் மனைவி புற்றுநோயால்( CANCER) இறந்துவிட்டார். ஒரே ஆச்சர்யமான விஷயம் என்னவென்றல் அக்குடும்பத்தைச் சேர்ந்த அனைவரும் மிகவும் நல்லவர்கள். அந்தப் பெண்மணியும் மிகவும் நல்லவர். அவருக்கு எப்படி புற்று நோய் வந்தது என்று அனைவரும் ஆச்சர்யத்தில் பேசிக்கொண்டு இருந்தார்கள். அவர் புற்று நோயால் இறப்பதற்கு முன்பாக அவருடன் நான் பேசும் பொழுதுதான் சில விஷயங்கள் எனக்குப் புரிந்தது. அவர் திருமணத்திற்கு முன்புதன் மனதுக்குப் பிடித்தவாறு வாழ்ந்துகொண்டு இருந்தவர். திருமணம் ஆனவுடன் கடந்த 15 வருடங்களாக ஒரு நிமிடம் கூட அவர் தன் மனதிற்குப் பிடித்தவாறு வாழாமல் தன் கணவரின் மேல் உள்ள அன்பால் குழந்தைகள் மேல் உள்ள அக்கறையாலும் 24 மணி நேரமும் தன் மனதுக்குப் பிடிக்காமல் கணவருக்கும், குழந்தைகளுக்கும் பணிவிடை செய்து அவர்களுக்குப் பிடித்தவாறு வாழ்ந்து வாழ்ந்து, அவர்களை அரவணைத்து நல்லபடியாக வாழவைத்து தன் மனதுக்குப் பிடிக்காமல் வாழ்ந்து புற்றுநோய் வந்து இறந்துவிட்டார். இதுதான் உண்மை. இதை நம்பித்தான் ஆகவேண்டும். நல்லவர்களுக்கு ஏன் கஷ்டம் வருகிறது என்றால் நல்லவர்கள் தன் மனதிற்குப் பிடித்தவாறு வாழ்வதே கிடையாது.


பல ஞானிகள், பாரதியார், விவேகனந்தர் போன்றோர் ஏன் இளவயதிலேயே இறந்து விட்டார்கள் என்றால் புத்திசாலித்தனம

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக