இந்த வலையதளத்தில்உள்ள நல்ல செய்திகள் என்னைச் சார்ந்த பல நண்பர்களுக்குசென்றடைய வேண்டும்என்ற நோக்கத்தில் தான் உருவாக்கப்பட்டது. இதுவரை நான்பதிவிட்டபதிவுகளும்,இனி பதிவிடப்போகும்பதிவுகளும்எனது சொந்தபடைப்புகள்அல்ல. பலபதிவர்கள்எழுதிய நல்லபதிவுகளைத்தான்இங்குதொகுத்துள்ளேன்.

வெள்ளி, 21 நவம்பர், 2014

120 டுவா தூக்கம்

டுவா என்றால் மலாய் மொழியில் (மலேசியாவில் உள்ள வழக்கு மொழியில்)இரண்டு என்று அர்த்தம். சாதாரணமாக நாம் ஒரு தூக்கம் மட்டுமே தூங்குகிறோம். இது இரட்டை தூக்கம்(Double Sleep). இது ஆழ்ந்த தூக்கத்தை குறிக்கும். இந்த ஆழ்ந்த தூக்கத்தின் மூலமாக நமது உடலில் அனைத்து நோய்களையும் குணப்படுத்தலாம். இதை வெறும் தூக்கம் என்று மட்டும் எண்ணிவிடாதீர்கள். இது ஒரு வகையான சிகிச்சை.
நமது உடலில் மூன்று விஷயங்கள் உள்ளன. உடல், மனம், புத்தி, உடல் பற்றி நமக்கு நமக்கு ஏற்கனவே தெரியும். மனம் என்பது கோபம், டென்ஷன், பயம், பிடித்திருகிறது, பிடிக்கவில்லை போன்ற விஷயங்களை ஆராய்ச்சி செய்வது. புத்தி என்பது நல்லது, கெட்டது, சரி, தவறு என்று முடிவெடுத்து அந்த விஷயங்களை யோசிப்பதற்கு புத்தி என்று பெயர். 


இவ்வாறு நம்மிடம் மூன்று விஷயங்கள் உள்ளன. அனாடமிக் செவிவழி தொடுசிகிச்சை என்ற புத்தகம் முழுமையாக படித்தவர்களுக்கு மற்றும் DVD பார்த்தவர்களுக்கு இந்த மூன்றையும் பிரித்து பார்க்கும் பக்குவம் இருக்கும். அந்த புத்தகத்தை முழுமமையாக படிக்காதவர்கள் உடனே அதை வாங்கிப் படித்துவிட்டு இந்த டுவா தூக்கம் பற்றிய செய்தியைப் படித்தல் நன்றாக புரியும். 


உடலுக்கு நோய் என்றால் என்ன என்று தெரியாது. நமது உடல், உடலிலுள்ள அனைத்து செல்களும் 24 மணிநேரமும் நம் உடலிலுள்ள அனைத்து நோய்களையும் குணப்படுத்தும் வேலையை மட்டுமே சித்து கொண்டிருக்கின்றன.


நமது புத்தியில் தான் நோய் இருக்கிறது. இந்த புத்தி மனதை கெடுத்து மாசுப்பட்ட மனம் உடலுக்குள் சென்று நோய்களை ஏற்படுத்துகிறது. எனவே நாம் நம்மை ஒரு நோயாளி என்று எண்ணும் போது அந்த நோய் பெரிதாகிறது. இதுவே நம்மை ஒரு ஆரோக்கியமான நபர் என்று என்னும்போது ஆரோக்கியம் பெரிதாகிறது. நம்மை பற்றி நாம் என்ன நினைத்துக் கொண்டிருக்கிறோமா அது உடலில் நடைபெறுகிறது.


உதாரணமாக ஒரு ஊரிலிருந்து இன்னொரு ஊருக்கு ஒருவர் தனித்தனியாகக் காரை ஓட்டிக்கொண்டு பயணம் செய்ய வேண்டும். அவர் காரை ஓட்டத் துவங்குவதற்கு முன்பே ‘500 கிலோ மீட்டர் 8 மணி நேரம் தொடர்ந்து காரை ஓட்டினால் நான் அந்த ஊருக்கு சென்ற உடன் களைப்படைந்து விடுவேன்’ என்றோ, நான் உடல் பலவீனப்பட்டு விடுவேன் என்றோ முதலிலேயே எண்ணினால் அப்படியே நடக்கும். அதாவது முதலிலேயே கற்பனை செய்து, முதலிலேயே முடிவெடுத்து தன் உடல் பலவீனமாகிவிடும் என்று புத்தியில் எண்ணுவதால் பிறகு அதன்படியே உடல் களைப்படைந்து விடுகிறது.
நான் எப்போதும் என் புத்தியை உடலில் வேலை செய்யவே விடமாட்டேன். நான் அவ்வாறு கார் ஓட்டும் பொழுது அப்படி நினைத்துக்கூட பார்க்க மாட்டேன். அதனால் இரவு முழுவதும் கார் ஓட்டி முடித்த பிறகும் களைப்படைவதில்லை. ஆரோக்கியமாக இருப்பதற்கு வாய்ப்பாக உள்ளது. இது நமக்கு தெரியாது. எப்பொழுது நம் புத்தியை நிறுத்துகிறோமோ அப்பொழுது நமது உடலிலுள்ள நோய்கள் குணமாகிவிடும்.
நான் கடந்த 7 வருடங்களாக தினமும் காலை 10 மணிமுதல் மாலி 6 மணிவரை ஒவ்வொரு ஊராக சென்று மைக்கில் பேசி வருகிறேன். அனால் பொதுவாக ஆசிரியர்கள், சொற்பொழிவாளர்கள், பேச்சாளர்கள், சில சாமியார்கள் 1 மணிநேரம் அல்லது 2 மணிநேரம் பேசிமுடித்த உடன் சோர்வு ஏற்ப்பட்டுவிடுகிறது. களைப்படைந்து விடுகிறார்கள். அவர்கள் நான் ஒரு மணிநேரம் பேசினேன் இரண்டு மணிநேரம் பேசினேன், மிகவும் களைப்படைந்துவிட்டேன் என்று கூறுகிறார்கள்.


அப்படி இருக்கும்போது என்னால் எப்படி தினமும் 7,8 மணிநேரம் தொடர்ந்து பேசமுடிகிறது என்றால் நான் புத்தியில் மணிநேரம் பேசினால் களைப்படைந்து விடுவேன் என்ற எண்ணத்தை வைத்துக்கொள்வது கிடையாது. 


ஆனால் அதற்காக நான் களைப்படைய மாட்டேன் என்று அர்த்தம் கிடையாது. ஒரு வேலை திடீரென்று களைப்படையலாம். உடல் களைப்படையும் பொழுது அது உடலின் வேலை, உடலாகவே களைப்படையும் பொது அது ஓய்வு எடுத்துக்கொள்ளும் என்று எண்ணுவேன். ஆனால் நானாகவே என் உடல் களைப்படைந்து விடும் என்று முன்னரே முடிவு செய்ய மாட்டேன். எனவே தயவுசெய்து ஒரு விஷயத்தைப் புரிந்தது கொள்ளுங்கள். ஒரு மனிதனின் புத்தியை நிறுத்தி வைத்துவிட்டால் அந்த வினாடி முதலே உடலிலுள்ள நோய்கள் குணமடைய தொடங்குகின்றன. இதுதான் உண்மை.
மறைமலை அடிகளார் இதை அரிதுயில் என்று கூறுகிறார். எப்பொழுது ஒரு மனிதன் அரிதுயில் அதாவது தன்னை மறந்து இந்த சிந்தனையும் இன்றி தூங்குகின்றானோ அவன் குணமடைய ஆரம்பிக்கிறான். நாம் தினமும் தூங்குகிறோம். ஆனால் நோய் இருக்கிறது. ஏன்னென்றால் உண்மையில் நாம் தூங்கவே இல்லை. இதை எப்படிக் கண்டுப்பிடிப்பது? 


தூங்கச்செல்லும்போது இரவு கடைசியாக எதைப்பற்றி யோசித்துத் கொண்டு தூங்கினோமோ அந்த விஷயத்தை காலை விழித்தவுடன் நாம் யோசித்த்தோம் என்றால் நமது புத்தி உடலில் வேலை செய்திருக்கிறது என்று அர்த்தம். 


சில நேரங்களில் காலை எழுந்திருக்கும் பொழுது நாம் யார்? எங்கிருக்கிறோம்? நம் பெயர் என்ன? என்ன வேலை செய்துக்கொண்டிருக்கிறோம்? என்று எல்லாம் மறந்த நிலையில் எழுந்திருப்போம். இந்த மாதிரி எப்பொழுது எழுந்த்திருக்கிறோமோ அதுதான் உண்மையான ஆழ்ந்த தூக்கம்.


சில குழந்தைகள் அந்த தூக்கத்தை தூங்குகின்றன. குழந்தைகள் எழுத்த உடன் அப்படியே அமர்ந்து இருக்கும். கொஞ்சம் கொஞ்சமாகத்தான் அது சுறுசுறுப்படையும். அந்த மாதிரியான குழந்தைகள் ஆழ்நிலை தூக்கத்திற்கு சென்று வந்திருக்கின்றன என்று அர்த்தம். 


சில குழந்தைகள் எழுத்த உடன் வேகமாக செயல்படும். அந்த குழந்தைகள் ஆழ்நிலை தூகன் கொள்ளவில்லை என்று அர்த்தம். இது பெரியவர்களுக்கும் பொருந்தும்.
இந்த அரிதுயில் என்ற (டுவா தூக்கம்) ஆழ்நிலைத் தூக்கத்திற்கு பலவிதமான வழிமுறைகள் உள்ளன. ஆனால் இருப்பதிலேயே உலகத்தில் மிகவும் சுலபமான ஒரு வலி முறையை நாம் கற்றுக்கொள்ள போகிறோம். 


இந்த ஆழ்நிலைத் தூக்கத்திற்கு நாம் எப்படி எல்லா வேண்டும் என்றால் இதற்கு இருவர் தேவை. அதாவது ஒரே ஒருவர் மட்டுமே தனியாக இருக்கும் பொது அவரது புத்தி உடலுக்குள் வேலை செய்துக் கொண்டே இருக்கும். இரு உயிர்கள் எப்பொழுது ஒன்று சேர்கிறதோ அதாவது இரு உயிர்கள் என்பது இரண்டு நபர்களின் நுண்ணுடல் (சூட்சும உடம்பு) காந்த சக்தி (Aura) ஒன்று சேர்கிறதோ அப்பொழுது இருவரது புத்தியும் நிறுத்தப்படுகிறது. இது தான் இரகசியம். எனவே இந்த சிகிச்சைக்கு இருவர் தேவை.
டுவா தூக்கம் தூங்க எண்ணுபவர்கள் அமைதியான சூழ்நிலையில் தரையில் ஒரு விரிப்பின் மீது அல்லது கட்டிலில் மல்லாந்த நிலையில் படுத்துக்கொள்ள வேண்டும். கால்கள் நீட்டியிருக்க வேண்டும். பின்னக்கூடாது. இரண்டு கைகளையும் தனித்தனியே பின்னாமல் தளர்வாக வைக்க வேண்டும். கண்களை மூடிக்கொள்ள வேண்டும். அவர் அமைதியாக படுத்திருக்க வேண்டும். சிகிச்சை அளிப்பவர் அவர் தலைக்கு மேலே ஒரு அடி தள்ளி அமைதியாக அமர்ந்துக் கொள்ள வேண்டும். அவர் தரையில் படுத்திருந்தால் தலைக்கு அருகில் அமர்ந்துக்கொள்ளலாம். சிகிச்சை பெறுபவர் கட்டிலில் படுத்திருந்தால் சிகிச்சை அளிப்பவர் நாற்காலியில் அமர்ந்துக்கொள்ளலாம். 


சிகிச்சை அளிப்பவர் அமைதியாக அமர்ந்துக்கொண்டு இரண்டு கைகளிலும் உள்ள பாத்து விரல்களையும் அதன் நுனிப்பகுதியைக் கொண்டு சிகிச்சை பெறுபவரின் தலையில் அழுத்தம் கொடுக்க வேண்டும். அண்ணல் உலங்கை தலையில் படக்கூடாது. அதிகமாக அழுத்தக் கூடாது. அதற்காக பட்டும் படாமலும் வைக்கக் கூடாது. சிகிச்சை பெறுபவர்களுக்கு சிகிச்சை அளிப்பவரின் பத்து விரல்களும் தம் தலையில் அழுத்தம் கொடுக்கின்றன என்ற உணர்வு இருக்குமாறு அழுத்தம் தர வேண்டும். ஒரு தேங்காயை கையில் பிடிக்கும் பொது எப்படி பத்து இடங்களில் பத்து விரல்களும் படியுமோ அதைப்போல சிகிச்சை பெறுபவரின் தலையில் பத்து இடங்களில் தன்னுடைய பத்து விரல்களால் அழுத்தம் தர வேண்டும். சிகிச்சை கொடுப்பவர் இந்த முயற்சியையும் செய்ய வேண்டாம். அதாவது பிராண சக்தியை பிரபஞ்சத்திலிருந்து தன கைகளின் மூலமாக வாங்கி அவருக்கு சிகிச்சை அளிக்க வேண்டும் என்று நினைத்து செயல்பட வேண்டியதில்லை. அவருக்கு பிராணக் ஹீலிங் தெரிந்திருக்க வேண்டும் என்று அவசியமில்லை. தியானம் செய்தால் நல்லது. பிராணக் ஹீலிங் தெரிந்தால் அதை செயல்படுத்தினால் நல்லது. அண்ணல் தேவையில்லை. சும்மா உட்காந்திருந்தால் போதுமானது.இந்த சிகிச்சையை கொடுப்பவர் சும்மா உட்காந்திருக்க வேண்டும். தேவைப்பட்டால் அவர் காத்து ஒலி வாங்கி (EAR PHONE) மூலம் பாடல் கேட்டுக் கொள்ளலாம். அது அவர் மனதிற்கு பிடித்த அமைதியான, மென்மையான பாடலாக இருக்க வேண்டும். அந்த அறையில் தொலைக்காட்சி இயங்கிக்கொண்டிருக்க கூடாது. அலைபேசி சப்தம் எழுப்பாதவாறு பார்த்துக்கொள்ள வேண்டும். இந்த ஒரு சப்தமும் கேட்காமல் இருந்தால் மிகவும் நல்லது. முடிந்தவரை அழைப்புமணி (CALLING BELL), ஒலிப்பான் (HORN) போன்ற சப்தங்கள் எதுவும் இல்லாமல் அந்த அரை அமைதியாக இருந்தால் இந்த சிகிச்சையின் பலன் அதிகமாக கிடைக்கும். ஐந்து நிமிடத்திற்கு ஒரு முறை சிகிச்சை கொடுப்பவர் கைவிரல்களை சற்று நகர்த்தி வேறு இடத்தில் அழுத்தம் கொடுக்கலாம். தலைபகுதிக்குள் மட்டுமே அந்த மாற்றம் இருக்கவேண்டும். முன்தலை, உச்சந்தலை, பின்தலை காதுகளுக்கு அருகில் உள்ள பகுதி ஆகிய இடங்களில் ஐந்து நிமிடத்திற்கு ஒரு முறை மாற்றி அழுத்தம் கொடுத்துவர வேண்டும். ஏனென்றால் நமது மூளையில் இந்த இடங்களில் தொடுகின்றோமோ அந்தந்த இடம் சம்பந்தப்பட்ட இடங்கள் தூங்க ஆரம்பிக்கின்றன. தலையில் உள்ள அனைத்து இடங்களையும், தொட்டுவிட்டால் உடலில்; உள்ள அனைத்து உறுப்புகளும் தூங்கி தன்னைத்தானே குணப்படுத்திக்கொள்ளும். சிகிச்சை அளிப்பவர் கைகளில் வலி ஏற்பட்டால் ஒரு கையின் ஐந்து விரல்களை மட்டும் தலயில் வைத்துக்கொண்டு மற்றொரு கையின் ஐந்து விரல்களுக்கு ஓய்வு அளித்த்க்கொள்ளலாம்.இப்படி முதல் முறை சிகிச்சை கொடுக்கும் பொது குறைந்தது 4 மணிநேரம் தலையில் விரல்களால் அழுத்தம் தரவேண்டும்.
நீங்கள் யாருக்காவது இந்த சிகிச்சையை செய்து பாருங்கள் முதல் அரைமணி நேரத்திலேயே உங்களால் சிகிச்சை அளிக்கப்படும் நபர் இதுவரை இல்லாத அளவுக்கு அரை மணிநேரம் சென்றவுடன் வித்தியாசமான முறையில் அதிக அளவில் குறட்டை விட்டு தன்னை மறந்து தூங்கிவிடுவார். படுத்திருப்பவருக்கு நான் யார்? இந்த ஊர்? போன்ற எதுவுமே தெரியாது. ஒருவேளை 4 மணி நேரத்திற்குப் பிகு முக்கியமான வேலை இருக்கிறது அல்லது விமான நிலையம் செல்லவேண்டும் என்ற நிலை இருந்தால் கூட அனைத்தையும் மறந்து அவர் தூங்கிவிடுவார்.அவர் அவ்வாறு தூங்குவதை நாம் உணர முடியும் என்றாலும் நாம் விரல்களால் அழுத்தம் கொடுப்பதை தொடர்ந்து செய்ய வேண்டும். எவ்வளவு நேரம் அழுத்தம் கொடுக்கிறோமோ அவ்வளவு ஆழ்ந்த தூக்கத்திற்கு செல்வார். எனவே முதல்முறை இந்தப் பயிற்சி சியும் பொது தயவுசெய்து குறைந்தது 4 மணி நேரத்திற்கு கைகளால் அழுத்தம் தர வேண்டும். அதற்கு தகுந்தார்போல் சிகிச்சை பெற்றுக் கொள்பவர் தேவைக்கு தகுந்தார் போல் உணவருந்திவிட்டு, தாகம் இருப்பின் புதிய அளவு நீர் அருந்திவிட்டு, இயற்க்கை உபாதைகளை நிறைவு செய்து விட்டு இந்த சிகிச்சையில் பங்கேற்க வேண்டும். சிகிச்சை அளிப்பவரும் அப்படியே. உனக்கு, நீர் போன்றவற்றை போதுமான அளவு எடுத்துக்கொண்டு புற வேலைகளை நிறைவு செய்து விட்டு பின் 4 மணிநேரம் அவருக்கு சிகிச்சை அளிக்க தயாராக வேண்டும். ஏனென்றால் ஒரு மணிநேரம் கழித்து சிறுநீர் கழிக்கவேண்டும் என்ற உணர்வோ, மலம் கழிக்க வேண்டும் என்ற உணர்வோ, பசி உணர்வோ ஏற்படும் பொழுது ஆழ்ந்த தூக்கத்திலிருந்து வெளியே வர வேண்டியகதாகிவிடும். எனவே சிகிச்சை தருபவர் சிகிச்சை பெற்று கொள்பவர் இருவருமே இதை கவனத்தில் கொள்ள வேண்டும். மற்றொரு முக்கியமான விஷயம், சிகிச்சை அளிப்பவர் இரண்டு மூன்று மூன்று நாட்கள் தூக்கமின்றி இருக்கும் நிலையிலோ, உடல் நிலை பாதிக்கப் பட்ட நிலையிலோ சிகிச்சை அளிக்கக் கூடாது. பெண்கள் மாதவிடாய் சமயத்தில் சிகிச்சை அளிக்க கூடாது. ஆனால் சிகிச்சை பெற்றுக் கொள்ளலாம். மிகவும் நோய்வாய்பட்டவர்கள் சிகிச்சை அளிக்க கூடாது. ஆனால் சிகிச்சை பெற்றுக் கொள்ளலாம். 


வீட்டில் மிகபெரிய சோகமான நிகழ்ச்சி. நெருங்கிய உறவுகள் யாரேனும் தவறியிருக்கலாம். அத்தகைய சோகமான சூழ்நிலையில் சிகிச்சை பெற்றுக்கொள்ளலாம். சிகிச்சை அளிக்கக்கூடாது. 


சிகிச்சை அளிப்பவர் இளநீர், தண்ணீர், பழச்சாரு போன்றவற்றை அருகில் வைத்துக் கொண்டு தேவைப்பட்டால் பயன்படுத்திக்கொள்ளலாம்.சிகிச்சை பெற்றுக்கொள்பவருக்கு இது தேவைப்படாது. ஏனெனில் ஆழ்நிலைத் தூக்கத்திற்கு சென்று விடுவதால் அவருக்கு இது தேவைப்படாது. 


வாசியோகம் தெரிந்தவர்கள், பிராணாயாமம் தெரிந்தவர்கள் சிகிச்சை அளிக்கும் போது வாசியோகம் அல்லது பிராணாயாமம் சிதுக்கொண்டே சிகிச்சை அளிக்கும் போது மெகா அற்புதமான பலன் கிடைக்கும். பிராண ஹீலின் தெரிந்தவர்கள் பிராண சக்தியை தன் உடல் மூலமாக பெற்று தை சிகிச்சை பெறுபவரின் உடலில் அனுப்பும் போது நல்ல பயன் கிடைக்கும். தெரியாதவர்கள் அதைப்பற்றி கவலை பட வேண்டாம். சும்மா அழுத்தம் கொடுத்தால் போதுமானது. இப்படி செய்தால் அரைமணி நேரத்திற்கு பிறகு சிகிச்சை பெறுபவர் தூங்கிவிடுவார். சிகிச்சை அளிப்பவர் அமைதியாக் அமர்ந்து 4 மணி நேரம் சிகிச்சை கொடுத்தபின் மெதுவாக கையை எடுத்துவிட்டு தாங்களும் உறங்க செல்லவோ அல்லது வேறு வேளைகளிலோ ஈடுபடலாம். தூங்கிக்கொண்டு இருப்பார் அதற்கு பின் பல மணிநேரம் கழித்துதான் எழுவார். இதுவே தொடர்ந்து 48 மணிநேரம் தொடர்ந்து சிகிச்சை அகிக்கும் பட்சத்தில் 48 மணிநேரம் தூக்கத்தில் தான் இருப்பார். ஆனால் அப்படி சியைக் கூடாது. ஏனென்றால் 8 மணிநேரம் அல்லது 10 மணிநேரத்திற்குப் பிறகு உடலுக்கு தாகம், உணவு தேவை ஆகியவை ஏற்படும். மலம் சிறுநீர் கழிக்க வேண்டும் என்ற உணர்வு இருக்கும். இந்த விஷவங்காலி சியாமல் அவருக்கு சிகிச்சை அளிக்க கூடாது. பலன் குறைந்து விடும். அதிகபட்சம் 10 மணிநேரம் முதல் 12 மணிநேரம் வரை சிகிச்சை அளித்தால் போதும். கைகளை எடுத்தவுடன் ஒருசிலர் அரைமணிநேரத்தில் எழுந்து விடுவார்கள், ஒருசிலர் 10 மணிநேரம் கூட தூங்குவார்கள். விட்டுவிடுங்கள். அது ஒவ்வொருவரின் உடலின் தேவையை பொறுத்தது. சிகிச்சையை குறைந்தபட்சம் 4 மணிநேரம் கொடுக்க வேண்டும். அடுத்தநாள் 4 மணிநேரம் சிகிச்சை அளித்தால் மிகவும் நல்லது. இல்லையென்றால் 1 மணிநேரம் சிகிச்சை அளிக்கலாம். குறைந்தது 1 மணிநேரம் சிகிச்சை அளிப்பதே பலன் அளிக்கும். யாராவது மிகபெரிய நோய் உள்ளவர்கள், உலக வைத்தியத்தால் குணப்படுத்த முடியாது என்று முடிவு செய்யப்பட வியாதிகள் அனைத்தும் இந்த முறையில் குணமடையலாம். 


தினசரி 4 மணிநேரம் இதற்காக ஒதுக்கினால் போதும். ஒருவரை வேலைக்கு அமர்த்திக்கொண்டு இந்த சிகிச்சையை மேற்கொள்ளலாம். தினசரி மற்ற நேரங்களில் TV, ஏதேனும் ஒன்றை பார்த்துக்கொண்டு மகிழ்ச்சியாக பொழுதைக் கழித்த வண்ணம் இருப்பதை போல் ஒருவரை வேலைக்கு சேர்த்துக்கொள்ளலாம்.
குணப்படுத்த முடியாத வியாதி என்று கூறி அதற்கு பல இலட்சம் அல்லது கோடி ரூபாய் செலவு செய்து மருத்துவம் பார்ப்பதை விட இந்த மாதிரி ஒருவரை சிகிச்சைக்கு மாத சம்பளத்திற்கு நியமித்துக் கொள்வது நல்ல பயன் அளிக்கும். ஒருவருக்கு வேலை கொடுத்த மதிரும் ஆயிற்று. நம் வியாதி குணமடைந்த மாதிரியும் ஆயிற்று.
வீட்டில் ஒருவருக்கு ஒருவர் மாற்றி மாற்றி இந்த சிகிச்சையை கொடுத்துக்கொள்ளலாம். ஒருவர் தலையில் இன்னொருவர் கைவைக்கும்போது இரண்டு பேருடைய ஆராக்களும் ஒன்று சேர்க்கிறது. இரண்டு உயிரும் கலக்கிறது. ஈருயிர் சேர்ந்து ஆழ்நிலைத் தூக்கத்திற்கு வழிவகுக்கிறது. இதற்குப் பெயர் டுவா தூக்கம். 


இந்த சிகிச்சையை மலேசியாவில் உள்ள முத்தம்மாள் என்கிற பெண்ணுக்கு அவரது தாத்தா கற்றுக்கொடுத்திருகிறார். அவர் ஒரு மலேசியா வாழ் தமிழர். இந்த சிகிச்சை அப்பொழுது யாருமே கண்டுக்கொள்ளவில்லை. இதுவரை யாருமே பயிற்சி செய்யவில்லை. ஆனால் இப்போது அவர் எனக்கு கற்றுக்கொடுத்தார். நான் எனக்கும் மற்றவர்க்கும் இதை செயல்படுத்தி பார்த்தேன். மிகவும் அற்புதமாக இருக்கிறது. அதனால் தற்போது இதைப்பற்றி எல்லா வகுப்புகளிலும் பேசிக்கொண்டு இருக்கிறேன். இந்த ஒரே ஒரு சிகிச்சை மட்டும் தெரிந்துக்கொண்டால் மனது உலகை ஆரோக்கியப்படுத்தி விடலாம். இதைதான் கட்டிப்பிடி வைத்தியம் என்று கூறினார்களோ என்னவோ? வசூல் ராஜா M.B.B.S திரைப்படத்தில் கட்டிப்பிடி வைத்தியம் என்று இருக்கிறது. 


இப்பொழுது யோசித்துப் பார்கிறேன், குழந்தைக்கு நோய் வந்தால் மடியில் படுக்க வைத்து அதன் தலையை தடவி கொடுக்கிறோம். இன்னொருவர் அருகில் இருந்தால் போதும். ஒருவருக்கு நோய் வந்தால் மற்றொருவர் அருகில் ஆதரவாக இருந்தாலே போதும் என்பது உண்மை. அனால் இப்பொழுது அனைவரும் அனாதைகளாக சுற்றிக் கொண்டிருக்கிறோம். இன்றைய நாகரீக வாழ்கையில் பெரும்பாலானோர் கூட்டு கும்பமாக இல்லை. ஏன் கணவன் மனைவிகூட வாரம் ஒரு நாள் மாதம் ஒரு நாள் சந்தித்துக் கொள்கிறார்கள். வேலை அல்லது தொழில்ரீதியான காரணங்களால் தனித்தனியே வாழ்கின்றனர். இதனால் இந்த தனிமையான வாழ்க்கை முறையே அவர்களுக்கு நோயைக் கொண்டுவருகிறது. எப்பொழுதும் இருவர் ஒன்று சேர்ந்து வாழும் போது நம் மனதுக்கும் பிடித்தவர்கள் உடன் இருக்கும்போது மனது நோய்கள் குணமடைகிறது. பல கணவன் மனைவிமார்கள் இருவரும் ஒன்று சேர்ந்து இருக்கும் போது அன்பாக அமைதியாக ஆரோக்கியத்துடன் வாழ்கிறார்கள். குழந்தைகள் பெற்றோர்களை கட்டிப்பிடித்துக்கொண்டு தூங்குவதைப் பார்த்திருக்கிறோம். அந்த குழந்தைகள் ஆரோக்கியமாக இருக்கும். ஏனெனில் டுவா தூக்கம் அங்கே நடைபெறுகிறது. எனவே இனி தினமும் டுவா தூக்கம் கொள்வோம். நமது உடலிலுள்ள அனைத்து நோய்களையும் குணப்படுத்தி ஆனந்தமாக ஆரோக்கியமாக வாழ்வோம். எனவே இதை யார் யாருக்கு வேண்டுமானாலும் செய்யலாம். எனவே இனிமேல் யாருடைய நோயையாவது குணப்படுத்த வேண்டும் என்று எண்ணினால் எதைபற்றியும் கவலைபடாமல் உங்களுக்கு எந்தவித வர்மா புள்ளியோ, பிராண ஹீலிங்க்கோ, முத்ரா, ரெய்க்கி, நியுரோ தெரபி போன்ற எதுவும் தெரிந்திரிக்க வேண்டிய அவசியம் இல்லை. யார் மீது உணகளுக்கு அக்கறை இருக்கிறதோ, அவர்களை படுக்க வைத்து அவர்கள் தலையில் 10 மணிநேரம் கையை வையுங்கள். அவர்கள் ஆரோக்கியம் அடைவார்கள். நான் இத சிகிச்சையை பலருக்கும் கொடுத்து வருகிறேன். மிகவும் அற்புதமாக இருக்கிறது. சில நபர்கள் மிகவும் மோசமான நிலையில் இருக்கும் போது நாம் 5 மணிநேரம் முதல் 10 மணிநேரம் வரை தொடர்ந்து சிகிச்சை அளிக்கிறேன். நான் ஒருவனே அனைவருக்கும் சிகிச்சை அளிக்க முடியாது. எனவேதான் நான் இதை மற்றவர்களுக்கு கற்றுக் கொடுக்கிறேன். இந்த முறையை நான் மட்டுமல்ல, யார் வேண்டுமானாலும் தங்கள் கையைக் கொண்டு இந்த சிகிச்சையை அளிக்கலாம். இதற்க்கு நான் தேவை இல்லை. எனவே இதை புரிந்துக்கொண்டு மற்றவர்கல்லும் கற்றுக்கொடுங்கள். மற்றவர்களையும் தெளிவுப்படுத்துங்கள். 


ஒரு விஷயம் பாருங்கள்! இதை கற்றுக்கொண்டு மற்றவர்களுக்கு சொல்லிகொடுக்க ஒரு அரைமணி நேரம் ஆகுமா? உங்கள் உறவினர்கள் நண்பர்கள் என அனைவருக்கும் சொல்லிதாருங்கள். கேட்கிறார்களோ, இல்லையோ உங்களுக்கு தெரிந்த இந்த சிகிச்சையை மற்றவர்கல்லும் சொல்லி கொடுங்கள். ஒருவேளை இந்த சிகிச்சையை அவர்கள் பயன்படுத்தி நன்மை அடைந்தால் உங்களை தேடி வந்து உங்களை வாழ்த்திவிட்டு செல்வார்கள் பாருங்கள். அந்த சந்தோஷத்திற்கு ஈடு இணையே கிடையாது. 


சத்தியமாக நான் ஒன்று கூறுகிறேன். இப்போது நான் இறந்தாலும் மிகுந்த மகிழ்ச்சியாக சந்தோஷமாக நிம்மதியாக இறப்பேன். ஏனென்றால் என் மூலமாக இலட்சக்கணக்கான, கோடிக்கணக்கான மக்கள் ஆரோக்கியமடையும் கலையை கற்றுக்கொண்டனர் என்று எண்ணும் போது உயிருக்கு மேலும் மெருகேறுகிறது. நாம் வாழ்ந்த இந்த வாழ்விற்கு அர்த்தம் கிடைக்கிறது. நாம் பிறந்தோம், வாழ்ந்தோம், இறந்தோம், என்று இல்லாமல் எல்லோருக்கும் நன்மை அளிக்கும் விதமாக ஏதாவது செயல் புரிய வேண்டும். இப்பொழுது முதல் ஒரு சங்கல்ப்பம் எடுத்துக் கொள்ளுங்கள் இந்த சிகிச்சையை எனது நண்பர்கள், உறவினர்கள், எனக்கு தெறிந்த மற்ற எல்லோருக்கும் கற்றுக்கொடுப்பேன். பேருந்து பயணம் அல்லது வழிப்பயணம் செய்யும் போதோ எதுவாக இருந்தாலும் நான் சந்திக்கும் நபர்களுக்கு ஒரு அரைமணிநேரம் இதைப்பற்றி சொல்லிக்கொடுப்பேன். இதன் மூலமாக எனக்கு புண்ணியம் கிடைகிறது என்று எண்ணி கொள்வேன். இந்த டுவா தூக்கம் மூலமாக, அரிதுயில் மூலமாகா ஆழ்நிலைத் தூக்கம் மூலமாக நம் உடலில் உள்ள அனைத்து நோய்களையும் குணப்படுத்தி ஆரோக்கியமாக வாழ்வோம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக