இந்த வலையதளத்தில்உள்ள நல்ல செய்திகள் என்னைச் சார்ந்த பல நண்பர்களுக்குசென்றடைய வேண்டும்என்ற நோக்கத்தில் தான் உருவாக்கப்பட்டது. இதுவரை நான்பதிவிட்டபதிவுகளும்,இனி பதிவிடப்போகும்பதிவுகளும்எனது சொந்தபடைப்புகள்அல்ல. பலபதிவர்கள்எழுதிய நல்லபதிவுகளைத்தான்இங்குதொகுத்துள்ளேன்.

வெள்ளி, 21 நவம்பர், 2014

117 பிடித்ததைப் பிடி பாகம் - 1


நமது நாக்கிற்கு எந்த உணவு பிடிக்கிறதோ, அது நமக்கு நல்லது. அதே சமயம் எந்த உணவு பிடிக்கவில்லையோ அந்த உணவு நமக்குக் கெட்டது. அது உடலுக்குத் தீங்கு விளைவிக்கும் என்பதைப் புரிந்து கொள்ளவேண்டும்.

உதாரணமாக ஒருவர் தனக்கு ஆப்பிள் பிடிக்கிறது என்று கூறுவார். அவருக்கு நீங்கள் 15 ஆப்பிள் பழங்களைக் கொடுத்து சாப்பிடச் சொல்கிறீர்கள். காலை, மாலை, இரவு என்று மூன்று வேளையும் 3 நாட்களுக்கு வேறு எந்த உணவும் கொடுக்காமல் ஆப்பிள் பழத்தையே அவருக்கு பசி ஏற்படும் பொழுதெல்லாம் கொடுத்து கொண்டு இருங்கள்.

இரண்டாவது நாள் அல்லது மூன்றாவது நாள் அவருக்கு தமிழில் பிடிக்காத வார்த்தை ஆப்பிள் என்றாகிவிடும்.

இன்று பிடித்த ஆப்பிள் பழம் மூன்று நாட்களுக்கு பிறகு அவருக்கு ஏன் பிடிக்காமல் போய்விட்டது என்பதை யோசித்துப்பாருங்கள்.

அதாவது எப்பொழுது நமது நாக்கு ஒரு உணவு, காய்கறி, பழங்கள் பிடிக்கிறதோ அந்த உணவில் உள்ள தாதுக்கள், உயர்ச்சதுக்கள், பிராணசக்தி போன்றவை நமது உடலில் குறைவாக இருக்கிறது என்று அர்த்தம்.

முதல நாளில் ஆப்பிள் ஏன் பிடித்தமானதாக இருந்தது என்றால் ஆப்பிளில் உள்ள தாதுக்கள், உயர்ச்சதுக்கள், பிராணசக்தி போன்றவை நமது உடலில் குறைபாடக இருந்திருக்கின்றன. இரத்தில் சில தாதுக்கள் குறைவாக இருந்திருக்கிறது. அந்தப் பொருட்கள் அந்த ஆப்பிள் பழத்தில் இருந்திருக்கிறது. எனவே ஆப்பிள் நமக்கு பிடித்திருக்கிறது.

மீண்டும் மீண்டும் ஒரே பொருளை சாப்பிடும்பொழுது அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு என்பதைப்போல நமது உடலில் அந்த தத்துவம் வேலை செய்துகொண்டே இருக்கிறது. ரத்தத்தில் மற்றும் உடலில் தேவைப்படும் சத்துக்கள் போதுமான அளவுக்கு சேர்ந்துவிட்ட நிலையில் திருப்தி அடைந்து விட்ட நிலையில் நமக்கு அந்த ஆப்பிள் தேவைப்படுவதில்லை. எனவே ஆப்பிள் நமக்குப் பிடிக்காமல் போய்விடுகிறது.

கால்சியம், அயன், சோடியம், மெக்னீசியம், பாஸ்பரஸ் போன்றவை நம் உடலுக்குத் தேவைப்படும் தாதுக்கள் என்றாலும் ஒரு குறிப்பிட்ட அளவுக்கு மேல் செல்லும்பொழுது நமது உடல் இதை வேண்டாம் என்று முடிவெடுத்து நிராகரித்துவிடுகிறது. உடலை விட்டு வெளியேற்றுகிறது.

எனவே எப்பொழுது ஒரு உணவு படிக்கிறதோ அதை ஆசையாக தாராளமாக சாப்பிடுங்கள். அதற்கு எந்தக் கட்டுப்பாடும் கிடையாது. ஆனால் எப்பொழுது ஒரு உணவு பிடிக்கவில்லையோ, அது இலவசமாய் கிடைத்தாலும் தயவுசெய்து அதை தவிர்த்து விடுங்கள், மற்றவர்கள் சாப்பிடச் சொல்லி வற்புறுத்தவேண்டாம். ஏனேன்றால் மனதுக்குப்பிடிக்காமல் சாப்பிடும் ஒவ்வொரு கவளம் உணவும் உடலுக்கு தீங்கு விளைவிக்கிறது.

அது எப்பிடி தீங்கு விளைவிக்கிறது என்றால், மூன்றாவது நாள் ஆப்பிள்யை நாம் பிடிக்காமல் சாப்பிடும் பொழுது அதை ஜீரணிக்க வேண்டிய சக்திகள் அனைத்தும் நமக்கு விரயமாகிறது மேலும் சிறுநீரகம் கணையம், கல்லீரல் போன்ற உறுப்புகள் அந்த சத்துப்பொருட்களை கழிவுகளாக மாற்றி அதை சிறுநீரகம் வழியாகவோ அல்லது மலம் வழியாகவோ வெளியேற்ற வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. எனவே நமது உடலில் உறுப்புகளுக்கு தேவையில்லாத வேலைபளு அதிகமாகிறது. எனவே பசித்தால் மட்டுமே உண்ண வேண்டும்.

பொதுவாக இப்பொழுது உள்ள மருத்துவத் துறையினரால் சர்க்கரை நோயாளிகள் இனிப்பு சாபிடக்கூடாது என்று அறிவுறுதபடுகிரார்கள். உப்பு சாப்பிடாதீர்கள் BP அதிகரிக்கும் என்று எச்சரிகிரார்கள். கசப்பு, துவர்ப்பு, நாமே சாபிடுவதில்லை.; காரம் சாப்பிட்டால் தோல் நோய் வரும் என்று பயமுறுத்துகிறார்கள். புளி சேர்த்துக்கொள்ளவேண்டாம் முழங்கால், மூட்டுகளில் வலி வேதனை ஏற்படும் என்கிறார்கள்.

பூமிக்கு கீழ் விளையும் பொருட்களை உணவாக கொள்ளவேண்டாம் வாயுத்தொல்லை ஏற்ப்படும் என்கிறார்கள். தக்காளியை சேர்த்துக்கொண்டாலோ சிறுநீரகத்தில் கல்வரும் என்று பயமுறுத்துகிறார்கள். உருளைக்கிழங்கு சேர்த்துக்கொண்டால் வாயுத்தொல்லை ஏற்படும் என்று புத்திசாலிகள் அறிவுரை சொல்ல்கிறார்கள் கத்தரிக்காய் வேண்டாம், தோலில் நோய் வருமென்று உளறுகிறார்கள்.

நன்றாக யோசித்துப்பாருங்கள். இப்படி ஒவ்வொரு உணவிற்கும் ஏதாவது காரணம் கூறி சாப்பிட வேண்டாம் என்று தடை போடுகிறார்கள்.

இப்பொழுது உள்ள மருத்துவத் துறையினரால் சாப்பிடக்கூடாது என்று அவர்கள் குறிப்பிடும் உணவுகளை எல்லாம் எடுத்து ஓரமாக வைத்துவிட்டால் உங்கள் உணவுத்தட்டில் சாப்பிட ஒன்றுமே இருக்காது. கடைசியில் மருந்து மாத்திரைகள் மட்டுமே தவறாமல் சாப்பிட சொல்லி அறிவுறுதபடுகிரார்கள். மருந்து மாத்திரைகளையே ஜீரணம் செய்யும் இந்த உடலுக்கு பழங்களை ஜீரணம் செய்யத் தெரியாதா? தக்காளியை ஜீரணம் செய்யத் தெரியாதா? நமது உடலுக்குத் தேவையான அத்தியாவசியமான பொருட்கள் - இனிப்பு, உப்பு, காரம், கசப்பு, துவர்ப்பு ஆகிய ஆறு சுவைகளில் மட்டுமே இருக்கிறது.

எனவே தயவு செய்து எந்த ஒரு சுவையையும் எந்த ஒரு உணவுப்பொருட்களையும் ஏதாவது காரணம் கூறி ஒதுக்கிவிடாதீர்கள் அனைத்துமே உடலுக்கு நல்லதுதான்.

எப்பொழுது ஒரு உணவை, இயற்கையாய் படைக்கப்பட்ட உணவை சாப்பிடக்கூடாது என்று கூறுகிறார்களோ அவர்கள், அவை எல்லாவற்றையும் படைத்தது அவற்றிற்கான உணவையும் படைத்த இறைவனை முட்டாள் என்று கூறுகிறார்கள் என்று அர்த்தம்.

சப்போட்டா பழம் மனிதனுக்கு உடல் நலத்தில் தீங்கு விளைவிக்கும் என்று யாராவதுகூறினால் எனக்கு சிரிப்பு மட்டுமே வரும். பழங்கள் சாப்பிடாதீர்கள், குழந்தைகளுக்கு சளிபிடிக்கும் என்று யாராவதுகூறினால் நான் விழுந்து விழுந்து சிரிப்பேன். இவர்கள் அனைவரும் துரோகிகள். கடவுளுக்கு எதிராக பிரசாரம் செய்கிறார்கள்.

இறைவன் படைத்தது உணவாக அளித்த ஒன்றை சாப்பிடக்கூடாது என்று கூறுவது எவ்வளவு முட்டாள் தனமான பேச்சு. எனவே தயவு செய்து இனிமேல் எந்த உணவையும் மறுக்காதீர்கள். நிம்மதியாக சாப்பிடுங்கள். யாரோ நம்மை ஏமாற்றி வருகிறார்கள். அதைப் புரிந்து கொள்ளுங்கள்.

பொதுவாக நான் எப்படி உணவை சாப்பிடுவேன் என்பதை உங்களுடன் பகிர்ந்துக்கொள்கிறேன். இந்த முறையை நீங்களும் பின்பற்றினால் உணவை மருந்தாக மாற்றுவது மிகவும் சுலபம்.

நான் என் உணவை வீட்டிலோ அல்லது ஓட்டலிலோ எடுத்துக்கொள்வது வழக்கம் தயரிக்கபட்டிருக்கும் உணவு வகைகள் எல்லவற்றையும் நாம் சாப்பிடும் இலையிலோ அல்லது தட்டிலோ சிறிதளவு அனைத்து வகைகளிலும் எடுத்துக்கொள்ளவேண்டும்.

ஒருவேளை வீட்டில் தயாரிக்கப்படும் உணவில் இட்லி, சப்பாத்தி, பொங்கல், பூரி, என நான்கு வகைகள் இருந்தால் நாம் எப்படி சாப்பிடுகிறோம்.

முதலில் நான்கு இட்லிகளை சாப்பிட்டுவிடுகிறோம். பிடிக்கிறதா? பிடிக்கவில்லையா? என்பதைப் பற்றி கவனிப்பது கிடையாது. பிறகு?

வேறு வழி இல்லாமல் சப்பாத்தி, பூரி, பொங்கல் என அவற்றையும் அடுக்கிக்கொள்கிறோம். இப்படி சாப்பிடக்கூடாது.

முதலில் ஒரு இட்லி, ஒரு சப்பாத்தி, கொஞ்சம் பொங்கல், ஒரு பூரி என தட்டில் எத்டுத்து வைத்துக் கொள்ளவேண்டும். இப்பொழுது நமது வீட்டில் சமைக்கப்பட்டிருக்கும் உணவில் அனைத்திலும் கொஞ்சம் நம் தட்டில் இருக்கிறது. பிறகு நான்கு வகைகள் கொண்ட உணவிற்கு தேவையான சட்னி, சாம்பார் போன்றவற்றை எடுத்துக்கொள்ளவும். முதலில் இட்லியை எடுத்து வாயில் இட்டு மென்று சுவைத்து விழுங்கவேண்டும். அடுத்து இப்படியே ஒவ்வொரு வகையிலும் உள்ள உணவை சசிறிதளவு எடுத்து மென்று சுவைத்துப் பார்க்கவேண்டும்.

உதாரணத்திற்கு உங்களுக்கு முதலில் சப்பாத்தி சாப்பிடதோன்றுகிறது. சப்பாத்தி சாப்பிடுகிறீர்கள் சிறிது சாப்பிட்டவுடன் பிடிக்கவில்லை என்றால் சப்பாத்தி சாப்பிடவேண்டாம். பிறகு இட்லி சாப்பிடுகிறீர்கள். இட்லி பிடிக்கிறது. இட்லியில் உள்ள தாது பொருட்கள் உடலுக்கு தேவையாக இருக்கிறது. அதை சாப்பிடலாம். சப்பாத்தியில் உள்ள தாது பொருள் உடலுக்கு தேவையில்லை. எனவே அதை ஒதுக்கிவிடலாம். அதே போல் மீதமுள்ள உணவு வகைகளையும் இப்படியே சுவைத்து பார்த்து பிடிக்கிறது எனில் சாப்பிடலாம். பிடிக்காததை ஒதுக்கிவிடலாம். இதனால் எந்த ஒரு தவறும் இல்லை. பிடிக்காத உணவயும் தட்டில் வைத்து விட்டார்களே என்ற காரணதிற்க்காகவே நிறையப்பேர் பிடிக்காத உணவை சாப்பிட்டு விடுவதை வழக்கமாகவே செய்து வருகின்றனர்.

பஃபே சிஸ்டம் என்று புதிதாய் ஆரம்பிக்கப்பட்டுள்ள ( சுயசேவை முறை என்றும் சொல்லலாம் ) முறையில் எல்லாவகை உணவுகளையும் கொண்டுவந்து டேபிளில் வைத்துவிடுவார்கள். அவரவர்க்கு எது விருப்பமோ அதே உணவை விரும்பிய அளவு சாப்பிடலாம் என்ற முறையில் தற்பொழுது பரவலாக இம்முறை வழக்கத்தில் உள்ளது. நிறைய உணவகத்திலும் இம்முறை கையாளப்படுகிறது. பெரும்பாலும் விழாக்களில் இதை காண முடிகிறது. இது ஒரு நல்ல வரவேற்க்கதக்க உணவு முறை. ஏனெனில் நமக்கு எது பிடிக்கிறதோ அந்த உணவை விரும்பி உண்பதற்கான சிறந்த முறை இது.

எனக்கு இந்த முறையில் உணவு வளங்கப்படுவதாயின் மிகவும் சந்தோசமாக சாப்பிடுவேன்.

உதாரணமாக நான் பல ஊர்களுக்கும், பல நாடுகளுக்கும் நிகழ்சிகள் நடத்துவதற்காக சென்று வரும் பொழுது, அங்கிருக்கும் ஓட்டல்களில் உணவு உண்ணும் பொழுது இந்த மாதிரி பஃப சிஸ்டத்தில் உணவு உண்ண வாய்ப்பு கிடைக்கிறது. அப்பொழுதுதான் நான் என்ன செய்வேன் என்றால் இரண்டு மூன்று தட்டுகளில் அங்கு தயாரிக்கப்பட்ட உணவு வகைகள் எல்லாவற்றிலும் இருந்து கொஞ்சம் எடுத்து தட்டுகளில் போட்டுக்கொள்வேன். அதே போல எல்லா வகை பழங்கள், நெய், தேன், ரொட்டி, பொரியல் வகைகள் என அனைத்து வகைகளில் இருந்தும் கொஞ்சம் எடுத்துக்கொள்வேன்.

நீங்கள் இம்மாரியான உணவு வகைகள் சாப்பிடும் பொழுது எல்லாவற்றிலும் சிறிது சிறிது எடுத்து கொண்டு வந்து சாப்பிட அமருங்கள். சில உணவுப் பொருட்கள் ஒருவாய் சாப்பிடும்பொழுதே பிடிக்காது என்று தெரிந்து விடும். சில உணவு பொருட்கள் பார்க்கும் பொழுது நன்றாக இருக்கும். ஆனால் சாப்பிட நன்றாக இருக்காது. சில பொருட்கள் பார்க்கும் பொழுது பிடிக்காது ஆனால் சாப்பிடும் போது நமக்கு பிடிக்கும். இந்த உண்மையை முதலில் புரிந்து கொள்ளவேண்டும்.

எனவே உணவை பார்த்தவுடன் பிடித்தது, பிடிக்காதது என்று ஒதுக்காமல் எல்லவற்றையும் சிறிதளவு எடுத்துக்கொண்டு வரவேண்டும். பிறகு வாயில் வைத்து சுவைக்க வேண்டும். எது பிடிக்கவில்லையோ அதை ஒதுக்கிவிட்டு பிடித்த உணவை சாப்பிடவேண்டும். அதே சமயம் பிடித்த உணவையே பிடித்தது என்பதற்காக அதன் சுவை திகட்டி விட்ட பின்பும் தொடர்ந்து சாப்பிடக்கூடாது. உதாரணத்திற்கு கிச்சடி நமக்கு பிடித்த உணவு என்பதற்கு அதில் ஒரு மூன்று நான்கு கரண்டிகள் எடுத்து வந்து சாப்பிட ஆரம்பிக்கிறோம். கொஞ்சம் சாப்பிட்டவுடன் அதன் சுவை நமக்கு திருப்தி ஏற்பட்டு இனி போதும் வேறு ஏதாவது வகை உணவு சாப்பிடலாம் என்று தோன்றினால் மேற்கொண்டு மீதம் இருக்கும் கிச்சடியை சாப்பிடாமல் வைத்துவிடலாம்.

வேறு உணவை சுவைத்துப் பார்த்து அது பிடித்திருந்தால் அதை சாப்பிடலாம். இதில் நாம் கவனிக்க வேண்டிய, நாம் எச்சரிக்கையாக இருக்க வேண்டிய விஷயம் என்னவெனில் நமது நாக்குக்கு எந்த சுவை பிடிக்கிறதோ அதை சாப்பிடுவது உடலுக்கு நன்மை பயக்கும். எது பிடிக்கவில்லையோ அந்த உணவை சாப்பிடுவது உடலுக்கு கெடுதல் விளைவிக்கும். நமக்கு பிடித்த உணவை சாப்பிடுவது மருந்தாக செயல் படும். எனவே பிடிக்காத உணவை சாப்பிடவேண்டாம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக