இந்த வலையதளத்தில்உள்ள நல்ல செய்திகள் என்னைச் சார்ந்த பல நண்பர்களுக்குசென்றடைய வேண்டும்என்ற நோக்கத்தில் தான் உருவாக்கப்பட்டது. இதுவரை நான்பதிவிட்டபதிவுகளும்,இனி பதிவிடப்போகும்பதிவுகளும்எனது சொந்தபடைப்புகள்அல்ல. பலபதிவர்கள்எழுதிய நல்லபதிவுகளைத்தான்இங்குதொகுத்துள்ளேன்.

வெள்ளி, 21 நவம்பர், 2014

113 சப்தம் இல்லாத தனிமை கேட்டேன்

இன்று உலகில் உள்ள அனைத்து மனிதர்களும டென்ஷன்,,கோபம், பயம், முடிவெடுக்க முடியாத தன்மை, குடும்பத்தில் சண்டை, வியாபாரத்தில் பிரச்சினை, நிம்மதியில்லதா வாழ்க்கை இப்படி கஷ்டப்பட்டு வருகிறார்கள். இதற்கு அரசியல்வாதிகள்தான் காரணம், வியாபாரிகள்தான் காரணம், இல்லை என் மனைவிதான் காரணம், இல்லை என் நண்பர்கள் காரணம் என்று எல்லோரும் தவறாக நினைத்துக்கொண்டு இருக்கிறார்கள். உண்மையில் காரணம் அதுகிடையாது. ஒருநாளில் 24 மணிநேரத்தில் ஒரு மனிதன் எவ்வளவு நேரம் சப்தம் இல்லாத தனிமையில் இருக்கிறானோ, அவனால் இந்த உலகத்தில் எல்லா விஷயத்தையும் சாதிக்க முடியும், கோபம்வராது, டெண்ஷன்வராது, கவலைவராது, யாருமே சப்தம் இல்லாத தனிமையில் இருப்பதே எல்லை, இதுதான் உலகில் உள்ள அனைத்துப் பிரச்சனைகளுக்கும் அடிப்படைக்கராணம்.

அமர்க்களம் என்ற தமிழ்ப்படத்தில் ஒரு பாட்டுவரும், அதில் சப்தம் இல்லாத தனிமை கேட்டேன். யுத்தம் இல்லாத உலகம் கேட்டேன் என்று ஆயிரம் விஷயங்களை கேட்டேன் கேட்டேன் என்று அந்தப் பாடல் வரும். அதில் முதல் வரி சப்தம் எல்லாத தனிமை கேட்டேன். இந்த ஒன்று ககிடைத்தாலே உலகில் உள்ள அனைவரயும் ஞானிகளாக மாற்றமுடியும்


உதாரணத்திற்கு உங்கள் வீட்டில், கீழ்த்தொட்டி தண்ணீரை மேலே அனுப்புவதற்கு ஒரு மோட்டார் பம்ப் வைத்திருப்பீர்கள். அது ஓடிக்கொண்டிருக்கும், அதன் சப்தம் கேட்டுக் கொண்டிருக்கும். வீட்டிற்குள்ளே நீங்கள் இருக்கும்போது திடிரென அந்த மோட்டார் நிருததப்பட்டவுடன் ஒரு ஆழ்ந்த பெருமூச்சு வரும், சற்று நிம்மதியாக நாம் உணர்வது புரியும். இதிலிருந்து என்ன தெரிகிறது என்றால், அந்த மோட்டார் சப்தம் நமது மூளையை, இவளவு நேரம் கஷ்டப்படுத்தி வந்திருக்கிறது. இது நமக்கே தெரியாமல் இருத்திருக்கிறது. அந்த மோட்டாரை நிறுத்திய பிறகுதான் நாம் இவ்வளவு நேரம் சிரமப்பட்டிருந்தோம், இப்போது நிம்மதியாக இருக்கிறோம் என்பதைப் புரிந்துக்கொள்ள முடிகிறது. இதேபோல் நமதுவீட்டில், ரோட்டில், அலுவலகத்தில் பல சப்தங்கள் நம் மூளையை, ஆன்மாவை, உயிரை எப்போதுமே வந்துகொண்டே இருக்கிறது. 

உதாரணமாக சில வீடுகளில், அலுவலகங்களில் உள்ள மின்விசிறியின் சப்தம் அவர்கள் மூளையை பாதித்துகொண்டிருக்கிறது என்பது அவர்களுக்கே தெரியாது, சில வீடுகளில் மின்விசிறியில் உள்ள பேரின் பழுதடைந்திருந்தால், கடகட என இரவு முழுவதும் சப்தம் கேட்டுகொண்டே இருக்கும். இந்த சப்தம் அந்த வீட்டில் இருக்கும் அனைவரின் நிம்மதியைக் கெடுத்துக் கொண்டிருக்கிறது என்பதைப் புரிந்துகொண்டு, உடனடியாக அந்த மின்விசிறியை தூக்கிஎறிந்துவிட்டு, சற்று பணம் அதிகமாக செலவானாலும், நல்ல தரமானதாக, அங்கீகாரம் பெற்ற நிறுவனத்தின் சப்தமே இல்லாத மின்விசிறியை வாங்கி பொருத்துவதன் மூலமாக நாம் நிம்மதியாக வாழலாம். ஆனால் நாம் இந்தக்கடையில் மிகக்குறைந்த விலையில் கிடக்கும் என்று கேட்டு, தேடி அலைந்து மின்விசிறி வாங்கி பொருத்துகிறோம். எந்த அளவுக்கு குறைந்த விலையில் பொருத்துகிறீர்களோ அந்த அளவுக்கு மின்சாரத்தின் தேவையும் அதிகமாக இருக்கும். அதன் சப்தம் நமக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்பதை புரிந்துகொண்டு, இதற்கு முக்கியத்துவம் கொடுத்து நாம் மின்விசிறியின் சப்தம் நம்மை தொந்தரவு செய்யாமல் இருக்குமாறு பார்த்துக்கொள்ள வேண்டும். 


சில நேரங்களில் நம் வீட்டு மின்விசிறியிலிருந்து வரும் சப்தம் பக்கத்து வீட்டை கூட தொந்தரவு செய்யும். வேடிக்கையான ஒரு சம்பவம். நான் சில வருடங்களுக்கு முன்பு ஒரு வீட்டில் தங்கியிருந்தேன், அடுக்குமாடி குடியிருப்பு வீடு. நான் படுத்திருக்கும்போது என் காதுக்குள் கடகட என்று சப்தம் கேட்டுக்கொண்டே இருந்தது. நான் மிகவும் சிரமப்பட்டேன். பிறகு தான் தெரிந்தது, கீழ்வீட்டில் உள்ள மின்விசிறியில் உள்ள பேரின் பழுதடைந்திருந்ததால் அதன் சப்தம் என் காதுக்குள் வருகிறது என்று. கீழ்வீட்டிற்கு சென்று, உங்கள் மின்விசிறியில் பேரின் போய்விட்டது,மாற்றுங்கள் என்று கேட்டேன், மாற்றமுடியவில்லை என்றால் நானே உங்களுக்கு பணம் கொடுக்கிறேன். புது மின்விசிறி வாங்கித்தருகிறேன் தயவுசெய்து மாற்றங்கள் என்று கெஞ்சிக்கேட்டு அதை மாற்றினேன். பிறகு என்னால் நிம்மதியாக தூங்க முடந்தது.
இதேபோல் குளிர்சாதனப்பெட்டியிருந்து வரும் சப்தம் நமது நிம்மதியைக் கெடுத்துக்கொண்டிருக்கிறது என்பதைப் புரிந்துகொள்ளுங்கள். எனவே படுக்கை அறையில் குளிர்சாதனப்பெட்டி பயன்படுத்தாதிர்கள். இரவு முழுவதும் குளிர்சாதனப்பெட்டியிலிருந்து ஒரு அதிர்வு வரும். அந்த அதிர்வானது நமது நிம்மதியைக்கெடுக்கும்.இந்த சப்தம் நமது மூளைப்பகுதிக்குச் சென்று நமது மூளையை நிம்மதியைக் கெடுக்கிறது என்பதைப் புரிந்துகொண்டு சப்தம் இல்லாத டியூப்லைட்களை பயன்படுத்துவது ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. 


A/C யில் இருந்து வரும் சப்தம்கூட நமது மூளைப்பகுதியில் நிம்மதியைக் கெடுக்கிறது என்பதைப் புரிந்துகொண்டு அதையும் சற்று கவனிக்க வேண்டும். இப்படி ஒவ்வொரு வீட்டிலும், ஒவ்வொரு அலுவலகத்திலும்,கம்பியூட்டர், ரைட்டர், பிரிண்டர், ஜெனரேட்டர் போன்றவற்றின் பல சப்தங்கள் காத்து வழியாக சென்று நம்மை கஷ்டப்படுத்தி வருகிறது, எனவேதான் சில ஆசிரமங்களுக்குச் செல்லும்போது, சில காட்டுப்பகுதிக்கு செல்லும்போது அல்லது அமைதியான இடங்களுக்குச் செல்லும்போது நமது மனது தெளிவாக இருக்கிறது. 


கைக்கடிகாரம், சுவர்க்கடிகாரம், கைபேசி இப்படி பல ரூபத்தில் சப்தங்கள் நம்மை ஆட்டிப்படைத்தது வருகிறது. கைக்கடிக்காரத்திலிருந்த்து வரும் டிக்டிக் சப்தம்கூட மூளைப்பகுதியை பாதிக்கிறது என்பதை யாராலும் நம்பமுடியாது, ஆனால் அதுதான் உண்மை.


இப்போது செல்போன்களில் கொசுக்களை விரட்டுவதற்கென்று ஒருசில சாப்ட்வேர் வந்துகொண்டிருக்கிறது. இது அனைவரும் அறிந்ததே,அது எப்படி வேலை செய்கிறது பார்ப்போம். பல்வேறுவிதமான அலைவரிசையில் அதிர்வுகள் உள்ளன. ஒருசில அதிர்வு ஒருசில உயிர்களுக்கு பிடிக்கும், பிடிக்காது என்று கணக்கு இருக்கிறது. எனது குருநாதர்களில் ஒருவரான திரு.சுந்தர்ராஜன் ஐயா அவர்கள் ஸ்ரீவில்லிபுத்தூரில் வாழ்கிறார். இவர் மிகப்பெரிய விஞ்ஞானி. இவர் அதிர்வுகளை ஏற்படுத்தும் ஒரு சிறிய கருவியைக் கண்டுபிடித்தார். அந்த கருவியில் சப்தத்தினை மாற்றுவதற்காக சில அட்ஜஸ்மென்ட்டுகளையும் கண்டுபித்தார்.அந்த கருவியை அவர் வீட்டில் வைத்து ஒரு குறிப்பிட்ட அலைவரிசையில் ஒரு குறிப்பிட்ட அதிர்வை உருவாக்கும்போது வீட்டில் உள்ள அனைத்து பல்லிகளும் வீட்டைவிட்டு வெளியே செல்கிறது. வேறு அலைவரிசைக்கு அதிர்வை மாற்றும்போது கரப்பான்பூச்சிகள் வீட்டைவிட்டு வெளியே செல்கின்றது. ஒருசில குறிப்பிட்ட அதிர்வுகள் வைக்கும்போது கொசுக்கள் அந்த அதிர்வுகள் பிடிக்காமல் வீட்டிற்குள் வராமல் ஓடி செல்கிறது. இப்படி ஒவ்வொரு சப்தமும் ஒவ்வொரு
அதிர்வுகள் ஒருசில உயிருக்குப் பிடிக்கும் அல்லது பிடிக்காது. மனித மனத்திற்கு பிடித்த சப்தம், பிடிக்காத சப்தம் என்று இருக்கிறது. இந்த சப்தத்தின் அளவை கூடியவிரைவில் தெளிவாக அறிவியல்பூர்வமாக நாம் விரிவாக நிரூபிக்க உள்ளோம். இப்போது நாம் தெரிந்துகொள்ளவேண்டியது என்னவென்றால், ஒவ்வொரு சப்தத்திற்கும் தெரிந்துகொள்ளவேண்டியது என்னவென்றால், ஒவ்வொரு சப்தத்திற்கும் ஒவ்வொரு அதிர்விக்கும் ஒரு சக்தி உண்டு. எனவேதான் மொபைல் போனில் கொசுக்களை விரட்டும் அந்த அதிர்வை ஏற்படுத்தும்போது கொசுக்களுக்கு அந்த சப்தம் பிடிக்காமல் அந்த பகுதிக்குள் வருவது இல்லை. எனவே முடிந்தவரை நமது வீட்டில் சப்தம் இல்லாத தனிமையில் வாழும்போது நாம் உடல் ஆரோக்கியம் அடைகிறது. மனம் நிம்மதியாக வாழ்கிறது. உயிர் சந்தோஷமாக இருக்கிறது. எனவே முடிந்தவரை இரவு தூங்கசெல்லும்பொழுது அனைத்து எலக்ட்ரானிக், எலக்ட்ரிக் சாதனங்களை அணைத்துவிட்டு, தூங்கும்போது கனவில்லாத நிசப்தமான நிம்மதியான தூக்கமாக இருக்கும்.

எனது நண்பரிடம் இந்த விஷயத்தைக் கூறினேன், அவர் என்னிடம் கேட்டார், எனக்கு அந்த சாதனம் கண்டிப்பாக வேண்டும், செய்து கொடுக்கமுடயுமா என்று நானும் அவருடைய ஆர்வத்தைப் பாராட்டி நல்ல விஷயத்தை ஏற்றுக்கொள்ளும் நண்பரை நினைத்து பெருமைப்பட்டேன். அவரிடம் எதற்காக அந்த சாதனம் வேண்டும் என்று கேட்டேன். அதற்கு அவர் எந்த அலைவரிசையில் எந்த அதிர்வில் வைத்தால் என் மனைவி எனக்கு மிகவும் தொல்லை கொடுக்காமல் இருப்பாள் என்று கூறினார்.
எனவே ஒவ்வொரு மனிதனும் ஒரு நாளில் எவ்வளவு நிமிடம், எவ்வளவு நேரம், எத்தனை நாள் சப்தம் இல்லாத தனிமையில் வாழ்கிறோமோ, நம்மால் குடும்பத்தை சிறப்பாக கவனிக்க முடியும், அனைவரிடமும் அன்பாக பழக முடியும். தைரியமாக வாழ முடியும், அலுவலகத்தில் சிறப்பாக வேலைகள் செய்யமுடியும், வியாபாரத்தை நல்லமுறையில் பார்க்கமுடியும், நிம்மதியாக வாழமுடியும்.

சின்ன சின்ன விஷயங்களுக்கு கோபம், டென்ஷன், பயம், ஏன் நாம் கோபப்படுகிறோம் என்று தெரியாமல் பலரும் அதை எப்படி கட்டுபடுத்துவது என்று தெரியாமல் பலரும் விழித்துக் கொண்டிருக்கிறார்கள். எனவே, இனி தயவுசெய்து கோபத்திற்கும், பயத்திற்கும் மற்றவர்களை காரணம் சொல்லாமல் நாம் சப்தம் இல்லாத தனிமையில் வாழததுதன் காரணம் என்பதைப் புரிந்துகொண்டு இனி நம் வாழ்க்கையில் நிம்மதியாக வாழ்வதற்கு வழிகளைத் தேடுவோம்.
வாழ்க வானகம்! வாழ்க பூலோகம்!!
தூயவர்களே துணை!!
தூயவைகளே துணை!! எல்லாப் புகழும் இறைவனுக்கே!


ஹீலர் பாஸ்கரின் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக