இந்த வலையதளத்தில்உள்ள நல்ல செய்திகள் என்னைச் சார்ந்த பல நண்பர்களுக்குசென்றடைய வேண்டும்என்ற நோக்கத்தில் தான் உருவாக்கப்பட்டது. இதுவரை நான்பதிவிட்டபதிவுகளும்,இனி பதிவிடப்போகும்பதிவுகளும்எனது சொந்தபடைப்புகள்அல்ல. பலபதிவர்கள்எழுதிய நல்லபதிவுகளைத்தான்இங்குதொகுத்துள்ளேன்.

புதன், 4 ஏப்ரல், 2012

76 கிரகண நேரம்

ஓடு மீன் ஓட உறுமீன் வரும் வரை சாலக் காத்திருக்குமாம் கொக்கு. சந்தர்ப்பம், சூழ்நிலை என்று இயற்கையின் இழுப்பில் நாம் ஒரு பக்கம் ஓடிக்கொண்டு இருந்தாலும், நமக்கே நமக்கு என்று - சில அபூர்வமான வேளை வருவதும் உண்டு. அப்போது நாம் தேமே என்று வாழ்க்கையின் ஓட்டத்திலேயே ஓடாமல், லபக்குன்னு புடிச்சா ஆச்சு... இல்லை , காலம் முழுக்க புலம்பிக்கிட்டே திரிய வேண்டியது தான்..

எந்த நேரம் நல்ல நேரம் , எந்த நேரம் மோசமான நேரம் என்று அறிந்து கொண்டு, அதை  பயன்படுத்த தெரிந்தாலே போதும்.. வெற்றி மேல் வெற்றி நிச்சயம். இன்னைக்கு பார்க்க விருப்பது - இரண்டு அபூர்வ நாட்களைப் பற்றி...

பொதுவில் கிரகண நேரம் - பிரபஞ்சத்தின் சக்தி அளவிட முடியாமல் ஆர்ப்பரிக்கும். சமைத்த  உணவு என்று இல்லை -  நம் வயிற்றில் இருக்கும் உணவு கூட, கெட்டுப் போய் விடுமாம். அதனால் உடல் நலம் பாதிக்கப்படும். ஆதலால் கிரகண நேரத்திற்கு முன்னும் , பின்னும் குறைந்தது இரண்டு மணி நேரமாவது  இடைவெளி விட்டு உணவு உண்ணுவது நல்லது...

பெரிய ஆலயங்களில் - கருவறைகளை மூடி, பின்பு கிரகணம் முடிந்ததும் - பரிகார பூஜைகளை முறைப்படி செய்து , அதன் பிறகே தரிசனத்திற்கு அனுமதிப்பார்கள்...... தெய்வத்தையே கட்டுப் படுத்தும் அளவுக்கு சக்தி வாய்ந்த நேரம்..?

மந்திர , தந்திரம் என்று ஈடுபடுபவர்கள் - இந்த நேரத்தை தவறவிடுவதே இல்லை. இந்த நேரத்தில் ஜெபிக்கும் மந்திர ஜெபம் - பல மடங்கு வீரியத்துடன் செயல்படும் ...

கர்ப்பிணிப் பெண்கள் - இந்த நேரத்தில் வெளியே வராமல் இருப்பது நல்லது...

கிரகண நேரத்திற்கு அப்படியொரு ஈர்ப்பு சக்தி...!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக