இந்த வலையதளத்தில்உள்ள நல்ல செய்திகள் என்னைச் சார்ந்த பல நண்பர்களுக்குசென்றடைய வேண்டும்என்ற நோக்கத்தில் தான் உருவாக்கப்பட்டது. இதுவரை நான்பதிவிட்டபதிவுகளும்,இனி பதிவிடப்போகும்பதிவுகளும்எனது சொந்தபடைப்புகள்அல்ல. பலபதிவர்கள்எழுதிய நல்லபதிவுகளைத்தான்இங்குதொகுத்துள்ளேன்.

வியாழன், 1 மார்ச், 2012

73 குளிர்பானங்களை அதிக அளவில் அருந்துபவர்களுக்கு ஆஸ்துமா இலவசம்!

பெப்சி, கோகோ-கோலா மற்றும் இதர குளிர்பானங்களை தினமும் அதிக அளவில் அருந்தி வருபவரா நீங்கள்? அப்படியானால் இந்த பதிவு உங்களுக்குத்தான். அதிக அளவில் இவற்றை அருந்துபவர்களுக்கு ஆஸ்துமாவும், நுரையீரல் நோயும் வர அதிக வாய்ப்பிருப்பதாக ஆராய்ச்சி முடிவுகள் தெரிவிக்கின்றன. 

ஆஸ்திரேலியாவிலுள்ள அடிலெய்ட் பல்கலைக் கழகத்திலுள்ள ஆராய்ச்சியாளர்கள் சூமின் சீ என்பவர் தலைமையில் ஒரு குழுவாக தீவிர ஆராய்ச்சி ஒன்றில் ஈடுபட்டனர். அதாவது மார்ச் 2008 முதல் ஜூன் 2010 வரை இரண்டு வருடங்களில் அதிக அளவில் குளிர்பானங்களை அருந்தியவர்களை ஆராய்ச்சி செய்தனர். கிட்டத்தட்ட 16,907 நபர்களை இவ்வித ஆராய்ச்சிக்கு உட்படுத்திய போது முடிவுகள் திடுக்கிடச் செய்தன. 
இவ்வித குளிர்பானங்களில் கோக், பெப்சி லெமன் ஜூஸ், மினரல் வாட்டர் முதலியவையும் அடங்கும்.

தெற்கு ஆஸ்திரேலியா பகுதியில் உள்ள வயதுக்கு வந்த பையன்கள் மற்றும் பெண்களில் பத்தில் ஒருவர் தினமும் இவ்வித குளிர்பானங்களை அரை லிட்டருக்கும் அதிகமாக அருந்தி வந்தனர். இவ்வித நபர்களிடம் ஆஸ்துமா மற்றும் நுரையீரல் நோய் (மூச்சுத்திணறல்) வரும் வாய்ப்பு மிக அதிகமாக இருந்தது. 

மொத்தத்தில் தினமும் அரை லிட்டருக்கும் அதிகமாக இவ்வித குளிர்பானங்களை அருந்தி வந்தவர்களில் 13.3 சதவீதம் மக்கள் ஆஸ்துமாவினாலும் 15.6 சதவீதம் மக்கள் மூச்சுக்கோளாறு பிரச்சினையினாலும் பாதிக்கப்பட்டிருந்தனர். சிகரெட் புகைப்பவர்களுக்கு பாதிப்பு அதை விட அதிகமாக இருந்ததாம். 

ஆகையால் நம்ம ஊரு இளநீர், மோர், தயிர் போன்ற பானங்களே மிகச்சிறந்தவை ஆகும். ஓ.கே.வா மக்களே?!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக